ஊழல்வாதியான எடப்பாடி மோடி காலில் விழுகிறார்! ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய பேச்சு!
தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.திமுகவின் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் அக்கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்போது அவர் மேடையில் பேசியது,ஊழல்வாதிகள் ஊழல் வாதிகளுடன் தான் சேர்வார்கள்.அதனால் தான் ஊழல்வாதிகளான மோடி மற்றும் அமித்ஷா காலில் பழனிசாமி விழுகிறார்.எந்த மானமுள்ள தமிழனும் காலில் விழுவதை விரும்ப மாட்டன்.ஆனால் அமித்ஷா-வின் காலில் விழ வேண்டிய தேவையும் கட்டாயமும் முதல்வர் பழனிசாமிக்கு உள்ளது.பாஜாக விற்கு மண்டியிடும் கட்சிகளை மட்டுமே பாஜக தன்னுடன் கூட்டணி வைத்துக் கொள்கிறது.
பாஜக விற்கு யார் சென்றாலும் அந்த தலைவர்களின் காலை தொட்டு வணங்க வேண்டும்.சொல்லப்போனால் கடவுளைப்போல என சொல்லாமல் சுட்டிக்காட்டினார்.சம மதிப்பு தராத எந்த உறவும் பயனற்ற உறவாகும்.சிறந்த நாகரீகத்தின் கொண்ட தமிழ்நாட்டு முதல்வர்,மோடி மற்றும் அமித்ஷா காலில் விழுகிறார்.மேலும் தமிழகத்தை டெல்லி ஆட்சி செய்ய நான் விரும்பவில்லை என்றார்.அனைவரையும் அடிப்பணிய வைப்பதே ஆர்.எஸ்.எஸ்.பாஜக மோடியின் தினசரி வேலை என்றார்.
சமத்துவத்தை விரும்புவதே காக்கிராஸ்.ஒரு மொழி தான் பெரியது,ஒரு கலாச்சாரம் தான் உயர்ந்தது என சொல்லும் இந்தியா வேண்டாம்.வங்காளம்,தமிழ்,கன்னடம் என அனைத்து மொழிகளின் பெருமையை சேர்ப்பது தான் இந்தியா என்றார்.தமிழகத்தில் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா திண்டாட்டத்தை தீர்த்து வைப்போம் என்று கூறினார்.
பாஜக மோடி தமிழக பாரம்பரியத்தை அழிக்க நினைக்கிறார்.ஆனால் அதை மாற்றபோவது தேசிய முற்போக்கு கூட்டணி கட்சி தான் என்றார்.தமிழகர்கள் யார் முன்னும் தலைகுனிந்தது என்பது சரித்திரம் இல்லை.நாட்டின் அனைத்து அமைப்புகளின் மீதும் பாஜக அரசு தாக்குதல் நடத்தி வருகிறது.வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் 3000 ஆண்டுகாலமாக யார் முன்னும் தலைகுனிந்தது இல்லை.இந்தியா என்ற சிந்தனைக்குப் தமிழகம் மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது என்று தமிழ்நாட்டை பற்றி புகழுரை ஆற்றிக் கொண்டே இருந்தார்.