ஸ்டாலின் தொடர்பாக முக்கிய தகவலை வெளியிட்ட அரசியல் பிரபலம்!

0
179

தமிழ்நாட்டில் எதிர்வரும் 6ஆம் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆகவே தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள்.இதுபோக இடையிடையே அதிமுக, திமுக, என்று இரு பெரும் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்ற கட்சியை சார்ந்தவர்களை விரிவாக பேசுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள் இது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.அதன்படி திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா முதல்வரின் தாயாரைப் பற்றியும், முதல்வரை பற்றியும், விரிவாக பேசியிருப்பது தமிழகம் முழுவதிலும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

அதேபோல கோவை மாவட்டத்தில் அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகரன் என்பவர் திமுகவின் வேட்பாளரை பிரியாணி செய்து போடுவோம் என்று தெரிவித்தது போன்ற செயல்கள் தமிழகத்தில் நகைப்புக்குரிய செயலாக மாறிப்போனது.இந்த நிலையில், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் விவேகானந்தரை ஆதரிக்கும் விதமாக நடிகை ராதிகா சரத்குமார் நேற்றையதினம் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

அப்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது மற்றவர்களை தரக்குறைவாக பேசுவது திமுகவிற்கு வாடிக்கையாகிவிட்டது அந்த கட்சியில் அனேக நபர்கள் இதே போல தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அதுவும் மத்திய அமைச்சராக இருந்த ஒருவர் முதலமைச்சரை தரக்குறைவாக பேசி இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது அதிமுக மற்றும் திமுகவில் பெரிய ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார் ராதிகா சரத்குமார்.

அதேபோல திமுகவை வழி நடத்துவதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியை அடுத்து ஒரு மிகப் பெரிய செல்வாக்கு மிக்க தலைவர் யாரும் இல்லை என்று சொன்னதோடு தற்போதைய திமுகவின் தலைவர் ஸ்டாலினை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். அதேபோல ஆளும் கட்சியான அதிமுகவில் தலைவர் என்கிற ரீதியில் பெரிய அளவில் யாரும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். எதிர்வரும் தேர்தலில் ஐந்து கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

அந்த ஆரோக்கியமான போட்டி தான் மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு வழிசெய்யும். தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் ஒருவருக்கும் விலை போய் விடாமல் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து விருதுநகர் தொகுதியில் அந்த கட்சியின் வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து ராதிகா சரத்குமார் பிரச்சாரம் செய்தார் என்று சொல்லப்படுகிறது.

Previous articleதிமுகவை எச்சரித்த அதிமுக நிர்வாகி! கடும் அதிர்ச்சியில் ஸ்டாலின்!
Next articleBreaking தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஊரடங்கு? தமிழக அரசு தீவிர ஆலோசனை!