முதல்வர் தொடர்பான விமர்சனம்! திமுகவில் வெடித்தது ராசாவிற்கான எதிர்ப்பு!

0
118

சில தினங்களுக்கு முன்னர் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடந்த ஒரு பிரச்சாரத்தில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசா முதல்வரையும், அவருடைய தாயையும், குறிப்பிட்டு மிக அருவருக்கத்தக்க ஒரு விமர்சனத்தை முன் வைத்தார். அதாவது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கள்ள உறவில் பிறந்தவர் என்றும், குறைப்பிரசவத்தில் பிறந்தவர் என்றும், அவர் விமர்சனம் செய்தது தமிழகம் முழுவதிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்ப்படுத்தியது. சென்ற வருடத்தில் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் மரணமடைந்தார். அதனை அறிந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று முதலமைச்சருக்கு ஆறுதல் தெரிவித்து விட்டு வந்தார் என்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் தற்சமயம் முதல்வர் தொடர்பாக திமுகவைச் சார்ந்த ராசா இவ்வாறு அருவருக்கத்தக்க ஒரு விமர்சனத்தை வைத்திருப்பதை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வெளிப்படையாக கண்டிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும் மற்றும் அந்த கட்சிக்கு தேர்தல் வீயூக வகுப்பாளராக இருந்து வரும் பிரசாந்த் கிஷோர் அவர்களும் ராசா மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் தயங்கி வருவதற்கு காரணம் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு தான் என்று சொல்கிறார்கள் அவர். மீது கை வைத்தால் நிச்சயமாக திமுக தமிழகத்தில் மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என்று பயம் கொண்டிருக்கிறாராம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

ஆனால் தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்கிறேன் என்ற பெயரில் மீண்டும் ஒரு முறை அவர் முன்பு தெரிவித்த அதே கருத்தை வேறுவிதமாக தெரிவித்திருக்கிறார் ராசா இதனால் தமிழக மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பு எழுந்திருக்கிறது.அதோடு திமுக பிரச்சாரம் செய்யும் இடங்களிலும் சரி, தொலைக்காட்சி நிலையங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் விளம்பரங்களிலும் சரி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் முதல்வரின் தாயை பற்றி இப்படி அருவருக்கத்தக்க அவதூறான ஒரு கருத்தை தெரிவித்திருக்கும் ஒருவர் அந்த கட்சியில் இருப்பதால் மக்களிடையே அந்த கட்சி நம்பிக்கை இழந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது.

அதோடு இதை சற்றே பின்னோக்கி சென்றது யோசித்துப்பார்த்தால் இப்படி தேர்தல் சமயம் என்று வந்துவிட்டால் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விட்டு பின்பு அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கிக் கொள்வது திமுகவில் இருக்கக்கூடிய தலைவர்களின் வழக்கமாக இருந்து வருகிறது.ஓட்டு அரசியலுக்காகவும் தன்னுடைய அரசியல் லாபத்திற்காகவும் அடுத்தவர்களின் உறவுகளை கொச்சைப் படுத்தும் விதமாகவும் , அடுத்த மதத்தினரையும், அடுத்து ஜாதியினரையும் கொச்சை படுத்தும் விதமாகவும், பல அவதூறு கருத்துக்களை தெரிவித்து வாக்குகளை கேட்பது திமுகவின் பாணியாகவே மாறிவிட்டது என்று சொல்கிறார்கள்.

அதேபோல தாங்கள் ஒரு தவறான கருத்துக்களை தெரிவித்து உண்மை என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் கூட அதை நான் தெரிவிக்கவில்லை என்று சாதிப்பதும் அந்த கட்சிக்கு வாடிக்கையாகிவிட்டது தமிழகம் முழுவதிலும் இருக்கின்ற மக்களால் விமர்சனம் செய்யும் அளவிற்கு ஒரு கருத்தை தெரிவித்து விட்டு பின்பு அந்த கருத்தை நான் தெரிவிக்கவில்லை என்று சொல்லி மறுப்பு ஏற்றினர் நான் தெரிவித்த தவறான கருத்துக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று ஒரு தலைவர் தெரிவிக்கிறார் என்றால் அவர் எப்படிப்பட்ட ஒரு அரசியல் தலைவராக இருப்பார் என்பதை தற்போது தமிழக மக்களின் மனதில் இருந்து வரும் முக்கிய கேள்வியாக இருக்கிறது.

தேர்தல் வரும் சமயத்தில் எல்லாம் இந்த கட்சிக்கு இதே தான் வேலையாய் போய்விட்டது என்று தமிழகத்தில் அனேக இடங்களில் சாமானிய மக்கள் வரையில் தெரிவிக்கும் அளவிற்கு ஆகிவிட்டது அந்த கட்சியின் நிலைமை.சரி ஒரு கட்சியின் பொறுப்பான பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி பொறுப்பற்ற முறையில் மக்கள் பிரதிநிதிகளை மிகக் கேவலமாக விமர்சனம் செய்து விட்டு பின்பு அதனை மறுத்தால் அவற்றை ஏற்றுக் கொள்ளும் மக்கள் இருக்கிறார்கள் என்றால் அந்த மக்கள் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை யோசித்துப் பாருங்களேன்.

எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் அவர் பிரபலமானவராக இருந்தால் போதும் தங்களிடையே வந்து ஓட்டு கேட்டால் அவர்களுக்கும் வாக்களிக்க தவறமாட்டார்கள் தமிழக மக்கள். இதைத்தான் தமிழக மக்களிடையே இருக்கின்ற மிகப் பெரிய அறியாமை என்று சொல்கிறார்கள். அந்த அறியாமையை தான் திமுக பயன்படுத்தி வருகிறது ஒவ்வொரு தேர்தலிலும்.இது மட்டுமல்ல தனிப்பெரும் தலைவர்களையும் சரி, ஒரு மதத்தை சார்ந்த நம்பிக்கைகளையும், ஒரு சமூகத்தையும் மிகக் கேவலமாக விமர்சனம் செய்வதற்கு இந்த கட்சியினரால் மட்டுமே முடியும் என்று ஒரு கருத்து இருக்கிறது.

சரி இதற்கெல்லாம் யார் காரணம் இப்படி பொது இடங்களில் எதை வேண்டுமானாலும் தெரிவித்துவிட்டு பின்பு அதனை நாங்கள் செய்யவில்லை என்று தெரிவித்து மக்களிடம் வந்து வாக்குக் கேட்டு வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்து விட்டு பின்பு அவர்களையே எட்டி உதைக்கும் இந்த அவலம் எவ்வாறு உருவானது.மக்களிடம் இருக்கும் இந்த அறியாமை எங்கிருந்து வந்தது. மக்களிடம் இருக்கும் இந்த அறியாமை இதுபோன்ற கட்சிகள் தெரிவிக்கும் பல கவர்ச்சிகரமான திட்டங்களிலும் மாயாஜால பேச்சுகளிலும் இருந்து வந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதோடு தமிழகத்தில் இருக்கின்ற அனேக தொலைக்காட்சிகளில் அநேக சீரியல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. மக்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதை விடுத்து அந்த மாதிரியான தொடர்களில் என்ன நடக்கிறது என்பதை எந்த நேரத்தில் கவனித்து பார்க்க தொடங்கினார்களோ அதிலிருந்து தான் ஆரம்பமானது இந்த அரசியல் கட்சிகளின் சித்து விளையாட்டுக்கள்.தமிழக மக்களை பொறுத்தவரையில் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வாக்களித்து விட்டால் மட்டும் போதும் ஆட்சி சரியாக நடைபெற்று விடும் என்று கருதுகிறார்கள் ஆனால் நிலவரம் அதுவல்ல.

ஒவ்வொரு நாளும் அரசியலில் என்ன நடக்கிறது அங்கே என்ன பேசுகிறார்கள் நமக்கான திட்டங்கள் செயல்படுகின்றதா அல்லது திட்டங்களை அறிவித்ததுடன் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருக்கிறதா என்பது தொடர்பாக மக்கள் தெரிந்து கொண்டு அந்த கேள்விகளை தாங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய பிரதிநிதிகளிடம் கேட்க வேண்டும் அப்படி ஒவ்வொரு சாமானிய மக்களும் கேட்க தொடங்கினால் மட்டுமே இதற்கான முடிவும் வரும் மக்களும் விழித்துக் கொள்வார்கள்.

ஆனால் தமிழக மக்கள் எந்த நேரமும் தொலைக்காட்சி அருகிலேயே தான் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியே அமர்ந்து இருந்தாலும் தொலைக்காட்சியில் ஓடும் தொடர்களை மட்டும்தான் பார்க்கிறார்களே ஒழிய நாட்டில் என்ன நடக்கிறது என்பதை யாரும் கவனிப்பதில்லை. கேட்கப் போனால் யார் எப்படி சென்றால் நமக்கென்ன என்று இருந்து விடுகிறார்கள். அதுவே சில அரசியல் பண முதலைகளுக்கு வாய்ப்பாக போய்விடுகிறது.தமிழகம் முழுவதிலும் இந்த தொலைக்காட்சி தொடர் கலாச்சாரம் எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் மக்களும் விழித்துக் கொள்வார்கள். அதேபோல அரசியல்வாதிகளும் நேர்வழியில் செல்ல முயற்சி செய்வார்கள்.

ஒருவேளை மக்கள் நாம் செய்யும் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தால் நம்முடைய எண்ணம் ஈடேறாது என்று தான் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து தொலைக்காட்சிகளிலும் இதுபோன்ற தொடர்களை போட்டு அதன் மூலமாக மக்களை திசைதிருப்பி விட்டுவிட்டு தங்களுக்கு தேவையான வேலைகளை மட்டும் அரசியல்வாதிகள் செய்து கொள்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.இனியாவது விழித்துக் கொள்ளுமா இந்த தமிழ்ச் சமூகம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous articleமுதல்வர் தொடர்பான விமர்சனம்! ஆண்டிமுத்து ராசா மீண்டும் ஆணவப் பேச்சு!
Next articleஅதிமுக டிரைவர் வைக்கோலில் ரூ.1 கோடி! சிக்கிய அதிமுகவின் முக்கிய புள்ளி!