ராசாவை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திமுகவின் மற்றொரு முக்கிய புள்ளி!

0
123

தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்தே எதிர்கட்சியான திமுகவிற்கு தோல்வி பயம் தொற்றிக்கொண்டது போல் தான் தெரிகிறது. கடந்த பத்து வருட காலமாக ஆட்சியில் இல்லாத விரக்தியில் அந்த கட்சியில் இருக்கக்கூடிய முக்கிய தலைவர்கள் எல்லோரும் பலவிதமாக சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வருவது வாடிக்கையாகிவிட்டது.அதோடு கடந்த 2006ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைதான் தேர்தல் நாயகன் என்று சொன்னதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

அதையே சற்று மாற்றி சிந்தித்துப் பார்த்தால் தற்போது சர்ச்சைகளின் நாயகன் திமுக என்கிற அளவிற்கு அந்த கட்சியில் சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பதற்கான தலைவர்கள் வந்து விட்டார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. திமுக என்ற கட்சி மட்டும் கிடையாது அந்த கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அனைத்துமே சர்ச்சை கருத்துக்களை தெரிவிப்பதும் பின்பு அதனை மறுத்து பேசுவதும் வாடிக்கையான ஒன்றுதான் என்று சாமானிய மக்கள் முதல் கொண்டு உரையாற்ற தொடங்கியிருக்கிறார்கள்.

பின் விளைவு எப்படி இருக்கும் என்று தெரியாமல் முதலில் ஒரு கருத்துக்களை தெரிவித்து விடுவது பின்பு அதனை மறுத்து அறிக்கை விடுவது இதுபோன்ற செயல்கள் திமுகவிற்கு வாடிக்கையாகிவிட்டது. அதேபோலவே அந்த கட்சியில் இருக்கக்கூடிய கூட்டணி கட்சிகளும் சில சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து விட்டு பின்பு அதிலிருந்து விடுபடும் வல்லமை பொருந்திய கட்சிகளாக இருந்துவருகிறது.

திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய பல்வேறு அரசியல் கட்சிகள் இதுபோன்று சர்ச்சைக்குரிய அதேநேரத்தில் தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்து விட்டு அது மக்களிடையே கேள்விகளாக வர தொடங்கியவுடன் நாங்கள் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்பது போன்று மழுப்பலான பதிலை தெரிவித்து விட்டு ஒதுங்கிக் கொள்வது திமுக மற்றும் அந்த கட்சியுடன் இருக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் கைவந்த கலை என்று சொல்கிறார்கள்.

இதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் சமீபத்தில் முதல்வரையும் முதல்வரின் தாயாரையும் கொச்சைப்படுத்தும் விதமாக சில கருத்துக்களை திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ராசா தெரிவித்தார். இதற்கு தமிழகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது. அதோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருவொற்றியூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட சமயத்தில் ராசா அவர்கள் தெரிவித்த கருத்திற்கு வருத்தம் தெரிவித்ததோடு கண் கலங்கி நின்றார். இது அதிமுக தொண்டர்கள் இடையே கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் உண்டாக்கியது.

இதனையடுத்து திமுக தலைமை நேற்றையதினம் வெளியிட்ட ஒரு செய்தி குறிப்பில் திமுகவின் நிர்வாகிகளுக்கு நாவடக்கம் தேவை என்று தெரிவித்திருந்தது. நேற்றைய தினம் கட்சி நிர்வாகிகளை கண்டிக்கும் விதமாக திமுக தலைமை இப்படி ஒரு அறிக்கையை விட்டிருந்த நிலையில் இன்று ஒரு சர்ச்சை பேச்சின் மூலம் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன்.

திமுகவைப் பொறுத்தவரையில் திண்டுக்கல் ஐ லியோனி அவர் மேடை பேச்சுகளில் பேசும் சமயத்தில் நகைச்சுவையாக பேசுகிறேன் என்று தெரிவித்துக் கொண்டு பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து சிக்கலில் மாட்டிக் கொள்வதுண்டு. அந்த விதத்தில் தற்போது ராசாவும் இணைந்து கொண்டார். அவர் வரிசையில் தற்சமயம் தயாநிதிமாறன் அவர்களும் வந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. இதனால் திமுகவிற்கு கடுமையான நெருக்கடி உண்டாகியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு முதல்வரின் தாயாரை அசிங்கப்படுத்தும் விதமாக திமுகவின் ராசா பேசியிருக்கும் ஒரு சூழ்நிலையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் தொடர்பு செய்து தயாநிதிமாறன் மிகத் தரக்குறைவாக பேசி இருப்பது தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமயத்தில் ஜெயலலிதா அம்மா மோடி அப்பா என்றால் என்ன உறவுமுறை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து பெண்களைத் தொடர்ந்து இழிவாக பேசிவரும் திமுகவைச் சார்ந்த தலைவர்களை கண்டிக்கவில்லை என்று திமுகவை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அதே சமயத்தில் ஆக்கப்பூர்வமான அரசியலை திமுக செய்திட வேண்டும் அதோடு திமுகவினர் தனிமனித தாக்குதல் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை போன்ற செயல்களில் ஈடுபடுவது அராஜகம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த பேச்சுக்கு என்ன காரணம் திமுகவின் தோல்வி பயமா அல்லது எப்படியேனும் வெற்றி பெற்று விடுவோம் என்ற அகந்தையா என்ற கேள்வியும் தமிழகம் முழுவதும் எழ தொடங்கியிருக்கிறது.

தொடர்ந்து இதுபோன்ற அவதூறு கருத்துக்களை தெரிவித்து மற்றவர்களை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொள்ளும் திமுகவைச் சார்ந்த தலைவர்களை கண்டிக்காமல் திமுக தலைமை வேடிக்கை பார்ப்பது நியாயமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. அதேபோல இவர்களை தண்டிப்பதற்கு ஆளே இல்லையா என்ற கருத்தும் பரவலாக இருந்து வருகிறது.திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பது என்னவென்றால் திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களுடைய செயல்பாடு எந்த அளவிற்கு பெண்கள் விஷயத்தில் கீழ்த்தரமாக இருக்கும் என்ற கருத்தும் எழத் தொடங்கியிருக்கிறது.

ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையில் சாதி மறுப்பு திருமணங்களை ஆதரிக்கும் விதமாக ஒருசில வாக்குறுதிகளை கொடுத்திருக்கிறது.பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று தெரிவித்துவிட்டு இவ்வாறு பெண்களுக்கு எதிராக இப்படி ஆபாசமான கருத்துக்களை தெரிவிப்பதும் அவர்களை கேவலப்படுத்தும் விதமாக திமுகவைச் சார்ந்த தலைவர்கள் செயல்படுவதால் அந்த கட்சிக்கு இருக்கும் வாக்கு வங்கி வெகுவாக குறைந்து இருப்பதாக சொல்கிறார்கள்.

அதோடு பெண்கள் தொடர்பாக இப்படி தொடர்ச்சியாக அவர் ஒரு கருத்துக்களை தெரிவிக்கும் ராசா மற்றும் தயாநிதிமாறனை திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் இரண்டுமே அவர்கள் இருவரின் கருத்துக்களையும் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதோடு அவர்கள் இருவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதிமுகவினரும் பாஜகவினரும் அவசரம் காட்டாமல் அதே சமயத்தில் திமுகவின் உண்மை முகத்தை மக்களிடம் வெளிக்கொண்டுவர வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleஅலட்சியம் காட்டும் அரசாங்கம்! கொரோனா தொற்றால் தொடர் உயிரிழப்பு!
Next articleஇந்திய கிரிக்கெட் கேப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!