தமிழில் பேசி மதுரையை அதிர வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

0
132

தேர்தல் பிரச்சாரத்திற்காக நேற்றையதினம் மதுரைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று அங்கே வழிபாடு நடத்தி இருக்கிறார்.
தேர்தல் நெருங்கிவிட்டபடியால் தேசிய தலைவர்களின் பார்வை தற்சமயம் தமிழகத்தின் மீது பட தொடங்கியிருக்கிறது.அந்த வகையில், சமீபத்தில் தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி தற்போது மீண்டும் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருக்கிறார்.

நேற்று மதுரையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவர் இன்று மதுரையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது வெற்றிவேல் வீரவேல் என்று தெரிவித்து விட்டு நீங்கள் எல்லாம் நலமாக இருக்கிறீர்களா மதுரைக்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று தெரிவித்தார்.அதோடு புண்ணிய பூமியாகவும் வீர பூமியாகவும் இந்த மதுரை மண் விளங்குகிறது என்று தெரிவித்து இருக்கிறார்.

தமிழர்களின் பாரம்பர்யம் மற்றும் கலாச்சாரத்தை வளர்க்கும் நகரமாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.மறைந்த தென்மாவட்ட தலைவர்கள் எல்லோருக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான மதுரைவீரன் திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது. மீனாட்சியம்மன் கோவிலில் இருக்கும் இந்த மதுரைக்கு வந்தது என்னுடைய பாக்கியம் என்றே நினைக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

நம்முடைய நாட்டு மக்கள் வாழ்வாதாரம் மேம்படும் அதற்காக மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் மதுரை கொல்லம் போக்குவரத்து வழித்தடம் மேம்படுத்தப்பட இருக்கிறது. அதன் பிறகு தென் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சி அடையும் பல வருடங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து ஏராளமான சௌராஷ்டிர மக்கள் மதுரைக்கு வந்து குடியேறி இருக்கிறார்கள். அவ்வாறு வந்து குடியேறிய மக்களை மதுரை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் இது ஒருங்கிணைந்த இந்தியாவிற்கான அடையாளம் என தெரிவித்திருக்கிறார் பிரதமர்.

Previous articleசபரீசனை தொடர்ந்து திமுகவின் வியூகத்திலும் கை வைத்த வருமானவரித்துறை!
Next articleஅமித்ஷா செயலால் நெகிழ்ந்துபோன பாஜக தொண்டர்!