இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக நாட்டில் தொற்றின் வேகம் வெகுவாக குறைந்தது.அரசின் நடவடிக்கை காரணமாக படிப்படியாக குறையத் தொடங்கிய தோற்று தற்சமயம் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் இந்தியா அதிர்ச்சி அடைந்திருக்கிறது.வெகுவாக குறைந்து வந்த தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்சமயம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
இந்த தொற்றினால் ஒரு நாளுக்குள் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் மத்திய அரசு உஷார் அடைந்து இருக்கிறது.
இந்த நிலையில், மகாராஸ்டிரத்தில் தொற்றின் பாதுகாப்பு மிக அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.ஆகவே அந்த மாநிலத்தில் வார இறுதி தினங்களில் ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு போன்றவற்றை அறிவித்திருக்கிறார்கள் இது தொடர்பாக அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே புதிய விதிமுறைகளை அறிவித்திருக்கிறார்.
அந்த விதிமுறைகள் படி இன்று முதல் இரவு 8 மணி முதல் காலை 7 மணிவரையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது அதே போல வார இறுதி தினங்களில் வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணி முதல் திங்கள் கிழமை காலை ஏழுமணிவரை ஊரடங்கு அமலில் இருக்கும்.என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.