ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி என நேற்றைய தினம் தமிழகத்தில் இருக்கின்ற 234 தொகுதிகளிலும் சட்டசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் மொத்தமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் சார்பாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுவை, கேரளா ,ஆகிய மூன்று மாநிலங்களின் சட்டசபைக்கான தேர்தல் நேற்று ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. அதேபோல மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நேற்றைய தினம் அந்த மாநிலங்களுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த ஐந்து மாநிலங்களிலும் 475 சட்டசபை தொகுதிகளில் இருக்கின்ற ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 538 வாக்குப்பதிவு மையங்களில் நேற்றையதினம் வாக்குபதிவு நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் மொத்தமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 74.81 சதவீத வாக்குப் பதிவுகள் ஆகிய இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலை விட இந்த வருடம் வாக்குப்பதிவு சதவீதம் கூடுதலா அல்லது குறைவாக இருக்கிறதா என விரைவில் தெரிந்துவிடும் என சொல்லப்படுகிறது.இந்த நிலையில், வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் எல்லாம் வாக்குப்பதிவு எண்ணப்படும் மைய்யத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. தேர்தல் முடிவுகள் மே மாதம் இரண்டாம் தேதி வெளியாக இருக்கிறது.