இரவும்பகலும் கண் விழித்து பெட்டியை பாதுகாக்க வேண்டும்! தொண்டர்களிடம் ஸ்டாலினின் வேண்டுகோள்..!
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டு தேர்தலானது திருவிழாப்போல ஜெ ஜெ என்ற களைக்கட்டியது.அதுமட்டுமின்றி இரு மூத்த தலைவர்கள் மறைவுக்கு பிறகு அவர்களது சிஷிய பிள்ளைகளாக அவர்களது வழி வந்த வாரிசு மற்றும் கட்சி உறுப்பினர்கள் போட்டியிடும் முதல் தேர்தல்களம் இதுவே ஆகும்.அதனால் இந்த தேர்தளில் யார் ஆட்சியை கைபிடிப்பார்கள் என்று அதிக அளவு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
மக்களும் அந்த ஆர்வத்துடன் வாக்களித்ததால் இந்த முறை 75% வாக்கு பதிவு நடந்துள்ளது.அதுமட்டுமின்றி இதில் நடுநிலை கட்சிகளும் களம் இறங்கியதில் இந்த தேர்தல் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடாங்கியது.அதுமட்டுமின்றி தேர்தல் வேட்பாளர்கள் மக்களிடம் வாக்குகளை பெற அதிமுகவில் சிலர் பீடிகளுக்கு நூல் கட்டியும்,திமுகவில் சில துணிகளை துவைத்தும் மக்களோடு மக்களாக இருப்தாக காட்டி அவர்களின் ஓட்டுகளை கவரச் செய்தனர்.
இந்நிலையில் நேற்று வாக்கு பதிவு முடிந்த கையேடு திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில் அவர் கூறியது,மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை காவல்துறை,தேர்தல் அதிகாரிகள் பாதுகாத்துக் கொள்ளட்டும் என இருந்துவிடக்கூடாது.பாதுகாப்பு மையங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இரவும் பகல் என்று பாராமல் கண்விழித்து பாதுகாத்திட வேண்டும்.தேர்தல் பணி என்பது நேற்றுடன் முடியாமல் தொடரவே செய்கிறது என்றார்.அதுமட்டுமின்றி கண்ணும் கருத்துமாக மிகவும் எச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும் என தொண்டர்களிடம் கூறினார்.