அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அடுத்தடுத்து 2 வழக்குப்பதிவு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
தமிழக சட்டமன்ற தேர்தலானது நேற்று நிறைவடைந்த நிலையில் பல அசம்பாவிதங்கள் பல வாக்குச்சாவடிகளில் நடிபெற்றது.அந்தவகையில் கோவை தொண்டமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் சிவசேனாதிபதி கார்த்திக்கேயன் வாக்கிச்சாவடியை பார்வையிட சென்றார்.அப்போது அங்கிருந்த அதிமுக மற்றும் திமுக தொண்டர்களிடையே கை களப்பு ஏற்பட்டது.அச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனைத்தொடர்ந்து அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாக்குச்சாவடிக்குள் அதிமுக கொடி மற்றும் துண்டுடன் வந்த புகாரில் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.மண்டல தேர்தல் அலுவலர் ராஜா முகமது என்பவர் தேர்தல் விதிமுறைகளை அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீறியதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்த வழக்கிற்குமுன், வாக்களிக்கும் இரு தினங்களுக்கு முன்பே அனைத்து கட்சிகளும் இரவு 7 மணியுடன் தங்களது பரப்புரை முடித்துக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
ஆனால் தேர்தல் ஆணையம் கூறியதை கேட்காமல் பரப்புரை முடிந்ததும் ஆதரவாளர்களுடன் கூடியாதாக மற்றொரு வழக்கும் இவர் மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .இவர் மேல் முன்பே ஓர் வழக்கு உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் கூறும் எந்தவித விதிமுறைகளையும் கடைபிடிக்க கூடாது என்று நினைத்து விட்டார் போல,நேற்று வாக்குச்சாவடிக்கு சென்ற போது அதிமுகவின் கொடி,துண்டு ஆகியவற்றை எடுத்து சென்றுள்ளார்.இதன் அடிப்படையில் அவர் மீது மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.