மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Photo of author

By Rupa

மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

கொரோனா தொற்றின் காரணமாக சென்ற வருடம் 144 தடை உத்தரவு போடப்பட்டது.அதனைத்தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது.அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுக்கு தேர்வின்றி ஆள் பாஸ் செய்தனர்.அதே போல 2020 ஆண்டு பயின்ற கல்லூரி மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி செய்து,தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.அரியர் தேர்வுகளும் தேர்வின்றி தேர்ச்சி செய்ய உத்தரவிட்டது.ஆனால் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்குக்கு இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.அதில் நீதிபதிகள் கூறியது,அரியர் தேர்வுகளை ரத்து செய்து தேர்ச்சிபெற்றதாக தமிழக அரசு அறிவித்தது ஏற்க இயலாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.அரியர் வைத்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த பரிசீலனை செய்ய வேண்டும் என கூறினர்.அதுமட்டுமின்றி தேர்வு நடத்த தேர்வாணையம் மற்றும் தமிழக அரசு கலந்து யோசிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

அத்துடன் அரியர் தேர்வு எழுத விண்ணபித்த மாணவர்கள் எத்தனை பேர்?தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என பல்கலைகழகம் வாரியாக முழு விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்  நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.மீண்டும் தேர்ச்சியை நினைத்து மாணவர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.