அதிமுக பொதுக்குழு கூட்டம்.செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்து சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய கோரி அதிமுகவினர் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க தெரிவித்து சசிகலாவுக்கு சென்னை சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த 20116ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி இயற்கை எய்தினார் இதனைத்தொடர்ந்து அதன்பிறகு பொதுச்செயலாளராக சசிகலா அவர்களும் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதன்பிறகு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா 4 வருட சிறை தண்டனை பெற்று சிறை சென்று விட்டார் அவர் சிறையில் இருந்த சமயத்தில் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் நடந்தது. அந்த 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் நடந்தது. அந்த பொதுக்குழுவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை அதிமுகவின் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை தொடர்ந்து அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தெரிவிக்க வேண்டும் என்று சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் தினகரன் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்களும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்து இருந்தது. குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்கள்.
அதன்பிறகு இந்த வழக்குகள் சென்னை நகர சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. கடந்த முறை இந்த வழக்குகளை விசாரணை செய்த சமயத்தில் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருவதன் காரணமாக, இந்த வழக்கில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். இன்று இந்த வழக்கு மறுபடியும் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த சமயத்தில் சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக நிர்வாகிகள் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த மனுவிற்கு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.