இரவு நேர ஊரடங்கு தான் இனி! தமிழக அரசின் எச்சரிக்கை உத்தரவு!
கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை போல இந்த ஆண்டும் தொடர்ந்து பரவி தான் வருகிறது.அந்தநிலையில் பல உயிர்களை இழக்க நேரிட்டது.கொரோனாவை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும் கொரோனாவின் 2வது அலை உருவாகி தொற்றை பரப்பி தான் வருகிறது.இந்நிலையில் மகாராஷ்டிரா,குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனாவை கட்டுபடுத்த முடியாமல் மீண்டும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
அதனையடுத்து கட்சி வேட்பாளர்கள்,நடிகை நடிகர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.தற்போது கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருவதால்,அதிக அளவு கொரோனா பாதிப்புள்ள மாநில அரசுகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார்.அதில் மத்திய அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டுள்ளது.
பேருந்தில் 50 சதவீதம் மட்டுமே மக்கள் பயணிக்க அனுமதி அளித்துள்ளனர்.
அதேபோல திரையரங்குகளில் 50% மட்டுமே படம் பார்க்க அனுமதிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
சந்தைகளின் அருகிலிருக்கும் சிறு வியாபார கடைகள் வைக்க தடை விதித்துள்ளனர்.
வெளி மாநிலங்களிலிருந்து வரும் நபர்கள் கண்டிப்பாக இபாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
பூங்காக்கள்,கேளிக்கை விடுதிகள் என அனைத்து இடங்களிலும் 50% சதவீதம் மட்டுமே அனுமதி,
ஆட்டோக்க்களில் ஓட்டுனர் தவிர 2 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி.
அதேபோல வாடகை கார்களில் செல்பவர்கள் கார் ஓட்டுனரை தவிர 3 பேர் மட்டுமே பயனம் செய்ய அனுமதி.
விளையாட்டு அரங்கங்கள்,மைதானங்கள் என அனைத்து இடங்களிலும் பார்வையாளர்களுக்கு தடை விதித்துள்ளனர்.
கொரோனா பரிசோதனை எடுத்த பிறகு படப்பிடிப்பு நடத்த அனுமதி.
தேநீர் கடைகளில் 50% பேர் மட்டுமே அனுமதி.
திருமணங்களில் 100 பேர் மற்றும் இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே கலந்துக்கொள்ள அனுமதி.
திருவிழாக்கள் நடத்த அனுமதி மறுத்துள்ளனர்.
தொழிற்சாலைகளில் வழிகாட்டு நெறிமுறைகளை கடிக்க வேண்டும்.மேலும் கொரோனா தடுப்பூசி போட அத்தொழிற்சாலை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இரவு 11 மணி வரை உணவு அலுவலகங்கள் செயல்படும் என்னும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஆலையங்களில் இரவு 8 மணி வரை வழிபட அனுமதி அளித்துள்ளனர்.அதேபோல 45 வயதிற்கு மேலானோர் 2 வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
மறுஉத்தரவு வரும்வரை இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் செயல்படும் எனக் கூறியுள்ளனர்.ஆனால் இந்த கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்ற தவறினால் மீண்டும் அதிக அளவு கொரோனா தொற்றானது பரவ நேரிடும்.அப்போது சிறிதும் மாற்றமின்றி இரவு நேர ஊரடங்கு போடப்படும் என தமிழக அரசு எச்சரிக்கையாக தற்போதே தெரிவித்துள்ளது.
அடுத்த நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதே போல ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.அதில் தகுதியானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.