தமிழகத்தில் சிறப்பு விடுமுறை!! அரசு அறிவிப்பு!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

0
114
Special holiday in Tamil Nadu !! Government announcement !! Happy staff !!
Special holiday in Tamil Nadu !! Government announcement !! Happy staff !!

தமிழகத்தில் சிறப்பு விடுமுறை!! அரசு அறிவிப்பு!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல்  நடைபெற்று முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்காக பணியாற்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அலுவலர்கள், முன்னாள் காவலர்கள் ஆகிய பலர் பணியாற்றினர். இதற்காக இவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் அடங்கும்.

பொதுவாக தேர்தல் நேரங்களில் ஆசிரியர்களின் பங்குதான் அதிகம். இதனால் அவர்கள் வகுப்புகளை சரிவர முடிக்க முடியாமல் போகும் சூழ்நிலையும் ஏற்ப்பட்டது. இதற்கு முன்பாகவே கொரோனா பரவல் காரணமாக சுமார் 10 மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றது. ஏற்கனவே நடத்தப்பட வேண்டிய பாடங்களுடன் மேலும் கூடி போனார்ப்போல  தற்போது நடைபெற்ற தேர்தலின் காரணமாக மேலும் பாடங்கள் முடிக்கப்படாமல் சேர்ந்து விட்டது.

நடப்பு கல்வி ஆண்டில் 11 ஆம் வகுப்பு வரை தேர்வு ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் செய்யப்பட்டது. இதனை வேலைகளுடன் தேர்தல் பணியும் கூடுதல் சுமைதன். இந்நிலையில் கடந்த 6 தேதி நடைபெற்ற தேர்தலுக்காக பணியாற்றிய அனைவருக்கும் 7ஆம் தேதி விடுமுறை அளிக்க கோரிக்கை விடப்படன. அந்த கோரிக்கை மறுக்கப்பட்டது. இதை தொடர்து தமிழக அரசு சிறப்பு விடுமுறை ஒன்றை அறிவித்துள்ளது இதன் படி தேர்தல் பணியில்  ஈடுபட்டவர்கள்  இமாததிற்க்குள்  சிறப்பு விடுமறை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

Previous articleஇடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ்! கே.எஸ்.அழகிரி பேட்டி!
Next articleநடிகை சுனைனாவிற்கு கல்யாணமா? வெளிவந்தது காதல் ரகசியம்!!