அதிமுகவின் முக்கியபுள்ளிக்கு அலட்சியத்தால்.ஏற்ப்பட்ட விபரீதம்!

Photo of author

By Sakthi

அதிமுகவின் முக்கியபுள்ளிக்கு அலட்சியத்தால்.ஏற்ப்பட்ட விபரீதம்!

Sakthi

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. ஆனால் அதனை பொதுமக்கள் உணராமல் அலட்சியமாக இருந்து வருகிறார்கள்.
இதனால் இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.அதோடு தமிழகத்தில் பல முக்கிய அரசியல் புள்ளிகளுக்கும் இந்த தொற்று பரவி வருகிறது. அந்த வகையில், திமுகவின் ஜெ.அன்பழகனின் தம்பி ஜெ.கருணாநிதிக்கு இந்த தொற்று உறுதியானது.

இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான, எம் எஸ் எம் ஆனந்தனுக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.இதனையடுத்து அவர் கோயமுத்துரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு சட்டசபை தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாரிமுத்து அவர்களுக்கும் இந்த தொற்று ஏற்பட்டிருக்கிறது. மாரிமுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்சமயம் சிகிச்சையில் இருந்து வருகிறார்.