பிரபல அரசியல் தலைவர் மீது கல் வீச்சு! கடும் கோபத்தில் ஆதரவாளர்கள்
கடந்த 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்துள்ளது.இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்காக அனைவரும் எதிர்பார்த்திருக்கும் சூழலில் பிரபல அரசியல் கட்சி தலைவர் மீது கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வருகிற 17 ஆம் தேதி திருப்பதி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு தெலுங்கு தேசம் கட்சியின் சார்பாக பனபாக லட்சுமி போட்டியிடுகிறார்.இதனையடுத்து வேட்பாளர் பனபாக லட்சுமியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று மாலை 5 மணியளவில் திருப்பதி ரெயில் நிலையம் முன்பு வந்தார்.
அப்போது அவர் தலைமையில் வேட்பாளரை ஆதரித்து அவரது கட்சியினர் ஊர்வலம் நடத்தினர்.இந்த ஊர்வலத்தில் நடந்து சென்ற சந்திரபாபு நாயுடு மீது மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதை சற்றும் எதிர்பார்க்காத சந்திபாபுநாயுடு கீழே குனிந்து கல்வீச்சிலிருந்து தப்பித்தார். சந்திரபாபு நாயுடுவிற்கு எதிராக நடத்தப்பட்ட இந்த கல்வீச்சில் அக்கட்சியின் தொண்டர் ஒருவர் காயம் அடைந்தார்.