மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அங்கே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தற்போதைய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடைவிதித்து இருக்கின்றது.இந்த நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக குரல் எழுப்பி இருக்கிறார். தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்க வேண்டும். அதே போல ஒரு சார்பின்மை மற்றும் நடுநிலைமையை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து இருக்கிறது இருந்தாலும் ஆங்காங்கே சில சர்ச்சைகள் எழுத்திருக்கிறது.
இந்த நிலையில், மே மாதம் இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.மேற்கு வங்கத்தில் இருக்கும் 294 தொகுதிகளுக்கும்.8 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது..இதுவரை 4 கட்ட தேர்தல் நடைபெற்றிருக்கின்ற நிலையில்,ஐந்தாம்.கட்ட தேர்தல் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், மம்தா முஸ்லிம் வாக்குகளை பெறுவதற்கு என மதரீதியாக பிரச்சாரம் செய்ததாக அவர்மீது புகாரளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து விதிமுறைகள் மீறப்பட்டதாக மம்தாவுக்கு அடுத்த 24 மணிநேரம் பிரச்சாரம் செய்ய தடைவிதித்தது. இதற்காகத்தான் தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.