மாஸ்க் அணியாததால் லாக்கப்பிற்கு சென்ற தம்பதிகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு!
கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் தற்போது கொரோனாவின் 2 வது அலை உருவாகி வருகிறது.அந்தவகையில் அதிக கொரோனா தொற்று உள்ள மாநிலங்களின் முதல்வர்களை பிரதமர் நரேந்திரமோடி கண்டு காணொளி காட்சி மூலம் சந்தித்தார்.அப்போது பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வெளியிட்டனர்.நம் தமிழ்நாட்டில் பேருந்து,திரையரங்குகள்,கடைகள் என மக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் 50% மட்டுமே இருக்கும் படி அனுமதி தந்துள்ளனர்.
அத்தோடு உழவர்சந்தைகளில் சில்லரை வியாபாரங்களுக்கு தடை விதித்தனர்.மேலும் அவர்கள் கூறியது,வெளி மாநிலங்களிலிருந்து வரும் நபர்கள் கண்டிப்பாக இபாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.பூங்காக்கள்,கேளிக்கை விடுதிகள் என அனைத்து இடங்களிலும் 50% சதவீதம் மட்டுமே அனுமதி,ஆட்டோக்க்களில் ஓட்டுனர் தவிர 2 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதி.அதேபோல வாடகை கார்களில் செல்பவர்கள் கார் ஓட்டுனரை தவிர 3 பேர் மட்டுமே பயனம் செய்ய அனுமதி.
இவ்வாறு மக்களின் நலனுக்காக பல கட்டுப்பாடுகளை மத்திய அரசும்,மாநில அரசும் போட்டு வருகிறது.இதனை மக்கள் முறையாக பின்பற்றினால் மட்டுமே கொரோனா பாதிப்பிலிருந்து அனைவரும் வெளிவர முடியும்.அதுமட்டுமின்றி தற்போது இந்தியா கொரோனா பாதிப்பில் 3வது இடத்திலிருந்து 2வது இடத்தை நோக்கி வந்துள்ளது.இதனால் 45வயதுக்கு மேற்பட்டோருக்கு தமிழகத்தில் நாளை தடுப்பூசி திருவிழா நடத்துவதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார்.
அதன்பின் விதிமுறைகளை கடைபிடிக்காத நபர்களிடம் அபராதம் விதிக்குமாறு தமிழக அரசு கூறியுள்ளது.அந்தவகையில் முகக்கவசம் அணியாமல் இருந்த நபர்களிடம் மட்டும் 2 நாட்களிலேயே வாங்கிய அபராதம் 2.52 கோடியாக உள்ளது.அந்தவகையில் ஈரோடு அருகே கோபி பகுதியிலுள்ள கரட்டூர் என்னும் பகுதியில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அப்பகுதியில் உள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் ஆய்வு நடத்தினார்.அக்கடையில் அப்போது முகக்கவசம் அணியாமல் தம்பதியினர் பொருட்களை வாங்கி கொண்டிருந்தனர்.முகக்கவசம் அணியாததால் அந்த தம்பதியினர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.மாஸ்க் அணியாததால் தம்பதினர் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.