கூகுள் டிரான்ஸ்லேட்டின் புதிய அப்டேட்… பயனாளர்களுக்கு ஸ்டார் கொடுத்த கூகுள்!

0
120

கூகுள் டிரான்ஸ்லேட் என்பது மொழிபெயர்ப்பு பயன்பாடுகளில் சிறந்து விளங்குகிறது. அனைத்து மொழிகளையும் நம் விருப்ப மொழிகளுக்கு டிராஸ்லேட் செய்ய கூகுல் டிரான்ஸ்லேட் பயன்படுகிறது. மேலும் இந்த பயன்பாட்டை கணினியில் மட்டுமின்றி ஆண்டிராய்ட் மொபைல்களிலும் இந்த செயலியை பயன்படுத்தி அதன் சேவையை பெறலாம்.

மேலும் இதில் மிகச்சிறந்த அம்சங்களில் ஒன்று என்வென்றால் இது நிகழ்நேரத்தில் உரையாடல்களை நடத்துவதற்கும் அவற்றை தொலைபேசியில் மொழிபெயர்ப்பதற்கும் உதவும். இந்த நிலையில் தற்போது நிகழ்நேர மொழிபெயர்ப்புகளின் டிரான்ஸ்கிரிப்ட்களை சேமிக்க அனுமதிக்கும் என்று அந்நிறுவனம் அன்மையில் அறிவித்துள்ளது.

நாம் உரையை எழுதும்போது திரையின் மேல் வலது மூலையில் ஒரு நட்சத்திர பட்டன் ஒன்று இருக்கும். அந்த பட்டனை தட்டினால், நமது தொலைபேசியில் டிரான்ஸ்கிரிப்டுகள் சேமிக்கப்படும். பக்கத்திலுள்ள சைடுபார் (sidebar) – ல் இருந்து இவற்றை அணுகலாம். கூகுளின் இந்த டிரான்ஸ்கிரிப்ட் அம்சம் தற்போது ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ், பிரஞ்சு, ஜெர்மன், தாய், இத்தாலியன், ரஷ்யன் மற்றும் போர்த்துகீசியம் என ஒன்பது மொழிகளில் செயல்படுகிறது.

XDA  டெவலப்பர்களின் கூற்றுப்படி,  மே மாதத்தில் இந்த அம்சம் டெவலப்-ன் கீழ் காணப்பட்டது. ஆனால் இது சேவையக பக்கம் (server side ) இருப்பதால், அனைவருக்கும் காண்பிக்கப்படாமல் போகலாம். அதனல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பிளே ஸ்டோரில் கிடைக்கும் கூகுள் மொழிபெயர்ப்பிற்கான சமீபத்திய பதிப்பை அப்டேட் செய்வதன் மூலம் இந்த புதிய பயன்பாட்டை பெற இயலும் என கூறப்படுகிறது.

Previous articleவிற்பனை தொடங்கியது 30 ஆயிரம் மொபைல் தற்போது ரூ.10000 ரூபாய்க்கு! சாம்சங்கின் புதிய வெளியீடு!
Next articleமம்தாவிற்கு ஆதரவாக களமிறங்கிய தமிழக பிரபலம்!