24 மணிநேர பிரச்சார தடை முடிந்தது! மீண்டும் வந்தது வங்கத்தின் பெண்சிங்கம்!

0
114

மேற்கு வங்க மாநில முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் உரையாற்றியதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு தேர்தல் ஆணையம் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு இரண்டு நாள் தடை விதித்தது.

அதாவது பணத்தை வாங்கிக் கொண்டு உரையாற்றும் சாத்தானின் பேச்சைக் கேட்டுக் கொண்டு சிறுபான்மையினர் தங்களுடைய வாக்குகளை பிரிக்க வேண்டாம் என்று அவர் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் விதிகளை மீறியதாக தெரிவித்து நான்தான் கட்சிக்கு தேர்தல் ஆணையம் 12ஆம் தேதி இரவு 8 மணி முதல் நேற்று இரவு 8 மணி வரை அதாவது 24 மணி நேரம் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்தது. ஆனாலும் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை ஜனநாயகத்திற்கு எதிராக இருக்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார்.

அதோடுமட்டுமல்லாமல் நேற்று மதியம் கல்கத்தாவில் அவர் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டு இருக்கிறார். வழக்கமாக மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் மம்தா பானர்ஜி தற்சமயம் அமைதியாக ஓவியம் வரைந்தார் என்று சொல்லப்படுகிறது. மதியம் 12 மணியளவில் ஆரம்பித்த மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் இரவு முடிவுக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையே மம்தா பானர்ஜிக்கு விதிக்கப்பட்ட 24 மணி நேர பிரச்சார தடை உத்தரவு நேற்றுடன் முடிவுக்கு வந்ததையடுத்து அவர் இன்று காலை மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார். ஐந்தாம் கட்ட தேர்தல் இன்னும் சில தினங்களில் நடைபெற இருப்பதால் மம்தா இன்றைய பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும், அவருடைய பிரச்சாரத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகிறது. பானர்ஜி மீண்டும் பிரசாதத்தை ஆரம்பிப்பதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleமருத்துவமனை நிரம்பியதால் நோயாளிகளுடன் நூறு ஆம்புலன்சுகள் காத்திருக்கும் அவலம்!
Next articleமக்களே உஷார்! மாநில அரசு வெளியிட்ட அதிர்ச்சிக்குள்ளான செய்தி!