கூட்டணியிலிருந்து விலகிய முக்கிய கட்சி! அதிர்ச்சியில் பாஜக மேலிடம்!

0
160

கோவா மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தற்சமயம் நடந்து வருகிறது. பாஜகவை சேர்ந்த பிரம்மோத் சாவந்த் முதலமைச்சராக இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அந்த கட்சியின் தலைவர் அறிவித்திருப்பது கோவா மாநில அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

கோவா மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலமே இருக்கின்ற சூழ்நிலையில், இந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதற்கு உண்டான வேலைகளை கோவா மாநிலத்தைச் சார்ந்த அரசியல் கட்சிகளும், தேசிய கட்சிகளும், ஆரம்பித்திருக்கின்றன.இந்த சூழ்நிலையில் ,தற்போது ஆளும் தரப்பாக இருந்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கொடுத்து வந்த கோவா முன்னணி கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக கோவா முன்னணி கட்சி வெளியிட்ட அறிவிப்பின்படி, பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலக கோவா முன்னணி கட்சியின் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.இதுதொடர்பாக பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கின்றோம்.

முதலமைச்சர் பிரம்மோத் சாவந்த் தலைமையிலான அரசு ஊழல் நிறைந்ததாகவும், நேர்மையாகவும், இருந்து வருகிறது இதன் காரணமாக கூட்டணியில் இருந்து நாங்கள் விலகிக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.இதனால் பாஜகவின் முக்கிய தலைவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleமக்களே உஷார்! மாநில அரசு வெளியிட்ட அதிர்ச்சிக்குள்ளான செய்தி!
Next articleகொரோனா தொற்றால் இந்தியாவில் ஓர் நாளில் 1,027 பேர் பலி! இனி முழு ஊரடங்கு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here