தமிழ்நாட்டில் முதல்வர் இபிஎஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கொரோனா தொற்று குறையத் தொடங்கியது. ஆனால் தற்சமயம் இந்த தொற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.கடைசி சமயத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றவில்லை என சொல்லப்படுகிறது.
மக்களும் கூட இந்த வைரஸ் வேகம் குறைந்தது என மக்களும் தங்களுடைய இயல்பான வாழ்க்கைக்கு மாறினார்கள். ஆனால் சமயம் பார்த்து காத்து இருந்த வைரஸ் தொற்று தன்னுடைய வீரியத்தை தற்சமயம் வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. இதன் காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், வைரஸ் தொற்று கட்டுப்பாட்டை மீறி பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் போதுமான தடுப்பூசிகள் இருக்கிறது என தமிழக அரசு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.சென்ற வருடத்தை விடவும் தற்சமயம் இந்த வைரஸ் பரவல் அதிகளவு ஏற்பட்டிருக்கிறது.என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று மதியம் தமிழக சுகாதாரத்துறை செயலாளரை சந்திக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.