நைகர் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 குழந்தைகள் பலி!
நைகர் தலைநகர் நியாமெ நகரில் கடந்த செவ்வாய்கிழமை மழலையர் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்தப் பள்ளி முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானதுடன், படித்துக் கொண்டிருந்த 20 மாணவர்களும் தீக்கிறையாகினர்.
பள்ளியில் மேற்கூரை வைக்கோலால் அமைக்கப்பட்டிருந்தது தீ வேகமாக பரவியதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை.
பள்ளியில் 3 முதல் 5 வயது வரையிலான மாணவர்களே படித்துக் கொண்டிருந்ததல் ,தீ பரவியதும் தப்பிக்க முடியாமல் உயிரிழந்தது அந்நாட்டில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் பின்தங்கிய நாடான நைகரில், அடிப்படை கட்டமைப்பே இல்லாத பள்ளியில் படித்து முன்னேற முயன்ற குழந்தைகளை இழந்துவிட்டதாக பெற்றோர்கள் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
இதனால் வைக்கோல் கூரை போன்றவற்றால் பள்ளிகள் நடத்தக்கூடாது என்றும் , அவ்வாறு செயல்படும் பள்ளிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.