அதிமுக அமைச்சருக்கு கொரோனா தொற்று! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொண்டனர்.அந்தவகையில் பரப்புரையில் ஈடுபட்ட பல அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்றானது உறுதியானது.அப்போது மநீம கட்சின் வேட்பாளர் சந்தோஷ் பாபுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
அதனையடுத்து அனைத்து ஊர்களுக்கும் சென்று பரப்புரை நடத்திய திமுக மகளிரணி செயலாளர் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் அவர் தனது வீட்டினுள்ளே தனிமைபடுத்திக் கொண்டார்.அந்தவகையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவிற்கு தேர்தல் பிரச்சாரத்தின் போதே கொரோனா தொற்று உறுதியானது.
அதன்பின் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தற்போது அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.சில நாட்கள் முன் சி.வி.சண்முகம் தேர்தலின் முடிவுகளை குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.இதனையடுத்து திண்டிவனத்திலிருந்து சென்னைக்கு வந்துள்ளார்.தற்போது கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.தற்போது இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அதிமுகவினர் சோகத்தில் உள்ளனர்.