ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ச்சியில் திமுக சீனியர்!

0
102

கடந்த ஆறாம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்திருக்கிற நிலையில்,அதிமுகவுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு ஆதரவாகவும், பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.அதோடு திமுக தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்ற கருத்துக்களும் மிகத்தீவிரமாக தமிழகம் முழுவதும் இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் பிரசாந்த் கிஷோர் மிக அழுத்தமாக திமுக ஆட்சிக்கு வரப்போகிறது என்று எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினை நம்ப வைத்து விட்டு சென்றிருக்கிறார். இதனால் ஆட்சி அமைக்கும் பணி திமுக தரப்பில் தற்போதே தொடங்கப்பட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

திமுக கொண்ட நம்பிக்கை காரணமாக யாருக்கு எந்த இலாக்கா தரவேண்டும் என தீவிரமாக ஆலோசனை செய்ய தொடங்கிவிட்டதாம்.அதனால் திமுக மூத்த தலைவர்கள் பலர் தனக்கு இந்த இலாக்காத்தான் வேண்டும் என்று ஸ்டாலினிடம் கேட்டு வருகிறார்களாம்.திமுகவின் பொதுச்செயலாளரும் திமுகவின் மூத்த தலைவருமான துரைமுருகன் தனக்கு முன்பு கொடுக்கப்பட்ட பொதுப்பணித்துறை ஒதுக்குவார்கள் என்று நம்பிக்கையுடன் இருந்து வருகிறார். ஆனால் அவருக்கு சட்டத்துறை ஸ்டாலின் ஒதுக்கி இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதனை கேட்ட துரைமுருகன் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது துரைமுருகன் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து வந்தார். ஆனால் துரைமுருகன் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, பொதுப்பணித்துறை தன்வசம் வைத்துக்கொண்டு சட்டத்துறை அவருக்கு ஒதுக்கினார் ஆனால் தற்சமயம் கருணாநிதி செய்த அதையே ஸ்டாலினும் செய்கிறாரே என்று துரைமுருகன் தரப்பினர் வருத்தத்தில் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஏற்கனவே உடல் நலக்குறைவால் சோர்வாக இருக்கும் துரைமுருகனுக்கு பொதுப்பணித்துறை கொடுத்தால் அது மிகவும் சுமையாக இருக்கும் என நினைத்துத்தான் ஸ்டாலின் இவ்வாறு ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என சொல்கிறார்கள்.

அப்படி என்றால் அந்த துறையை யாருக்கு வழங்கப் போகிறார் என்று துரைமுருகன் கேள்வி எழுப்பிய போது அந்தத் துறையை அவரை வைத்துக் கொள்ளப் போகிறார் என்று சொல்லியிருக்கிறார்கள். இதனால் துரைமுருகன் அதிர்ச்சி அடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போல ஸ்டாலினும் பொதுப்பணித் துறையை தானே வைத்துக் கொள்ள நினைத்திருப்பது துரைமுருகனை அதிர்ச்சியடைய வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.