பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு!! செய்முறை தேர்வுகளை மேற்கொள்ள புதிய வழிமுறைகள்!! கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு!! செய்முறை தேர்வுகளை மேற்கொள்ள புதிய வழிமுறைகள்!! கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு!!

இதியாவில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் அரசு பல முக்கிய கட்டுப்பாடுகளை மேற்கொண்டது. அதில் ஒன்றாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகலுக்கு தடை செய்தது. இதனால் கடந்த ஆண்டு முழுதும் மாணவர்கள் பள்ளி படிப்பினை ஆன்லைன்னில் மேற்கொண்டனர். 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆல் பாஸ் என்ற திட்டதினை மேற்கொண்டனர். பிறகு 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆல் பாஸ் செய்தனர். 12 ஆம் வகுப்புப் மாணவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் பொது தேர்வு பள்ளியில் நடைப்பெற்றது.

இதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ்ஸின் 2 ஆம் அலை இதியாவில் வேகமாகப் பரவத்தொடங்கி உள்ளதால் கடந்த 08.04.2021 அன்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மீண்டும் பள்ளி கல்லுரிகளிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆல் பாஸ் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது இந்த நிலையில் இந்த ஆண்டு பொது தேர்வு எழுதவிருக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளைக் கடந்த 9 ஆம் தேதி அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது.

இயற்பியல், வேதியியல், உயிரியல் செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளன. அரசு வெளியிட செய்முறை தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு: மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கு வரும்  பொழுது கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்யா வேண்டும். எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களுக்கு அருகில் சானிடைசரை வைக்கக்கூடாது. ஒவ்வொரு குழுவின் செய்முறை தேர்வுக்கு முன்னரும், பின்னரும் தேர்வு அறையைக் கிருமிநாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும். வேதியியல் செய்முறை தேர்வின்போது பிப்பெட்டுக்குப் பதிலாக ப்யூரெட் பயன்படுத்தலாம். ஆய்வக அறையில் உள்ள அனைத்து கருவிகளையும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு, அவர்கள் குணமடைந்த பின் தனியாக செய்முறை தேர்வு நடத்தலாம். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் பள்ளி இருந்தால், செய்முறை தேர்வை வேறு பள்ளியில் நடத்தலாம்’ உள்ளிட்ட கட்டுப்பாடுகளை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் ஆதாவது 16.04.2021 அன்று பிளஸ் 2  செய்முறை தேர்வு தொடங்கி உள்ளது. மேலும்  23. 04.2021 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 1.5 லட்சம் மாணவர்கள் செய்முறை தேர்வில் எழுத உள்ளனர்.