கோழி பிரியாணி மற்றும் 500 ரூபாய் பணமால் காணமல் போன அம்மா! கண்ணீர் மல்க அவரது மகன்!
கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் முடிந்த நிலையில் அனைத்து கட்சி தலைவர்களும் அதற்கு முன் பரப்புரையில் ஈடுப்பட்டனர்.கட்சி தலைவர்கள் பரப்புரை நடத்தும் போது கூட்டம் அதிகமாக கூடியது என எதிர்கட்சிக்கு பந்தா காட்டுவதற்கு காசு மற்றும் உணவு கொடுப்பதாக கூறி வீட்டிலிருக்கும் பெண்மணிகளை அழைத்து வந்து கூட்டத்தில் சேர்ப்பர்.அவ்வாறு சேலம் மாவட்டம் புத்தூர் பகுதியில்பரப்புரையில் கலந்துக்கொண்ட பெண்மணிக்கு நடந்த நிகழ்வு அனைவரையும் கவலைக்கொள்ள செய்கிறது.
சேலம் புத்தூர் பகுதியை சேர்ந்த பத்மநாதன் வயது (45).அவரது மனைவி சாந்தி வயது(41).அவர்களுக்கு ஓர் மகனும் உள்ளார்.பரப்புரை கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற சாந்தி இந்நாள் வரை வீடு திரும்பவில்லை.இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருக்ன்றனர்.
முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது,சாந்தி என்பவர் அனைத்து கட்சி கூட்டத்திற்கு வாக்கு கேட்டு சென்றுள்ளார்.காசு,உணவுக்கு ஆசைப்பட்டு அனைத்து கட்சிகளுக்கும் பரப்புரைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இதை முற்றிலும் பிடிக்காத அவரது மகன் அவர் தாயை திட்டியுள்ளார்.அதன்பின் அவர் மகன் திட்டியது அவரது அம்மாவிற்கு மனக்கவலை அடைந்துள்ளது.அதனால் அவரது அம்மா வீட்டை விட்டு சென்றுள்ளார்.அவரது அம்மா 8ஆம் தேதி வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது.இப்போதுவரை அவர் வீடு திரும்பவில்லை.போலீசார்கள் அவரது அம்மா தோழிகள் மற்றும் பிரச்சாரம் செய்த கட்சிகளை அழைத்து விசாரணை செய்து வருகின்றனர்.