நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
ஓராண்டு காலமாக மக்களை இந்த கொரோனா தொற்றானது விடாது துரத்தி வருகிறது.இந்த தொற்றால் மக்கள் பல உயிர்களை இழந்தனர்.மக்கள் நலன் கருதி அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு போடப்பட்டது.அதனால் மக்கள் வேலை வாய்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஏழு மாதங்களை கடந்த இந்த கொரோனாவனது சில தளர்வுகளுடன் மக்கள் வெளிய செல்ல ஆரம்பித்தனர்.
அதன்பின் முதலில் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தனர்.அதனையடுத்து மக்கள் கொரோனா-வுடன் வாழ ஆரம்பித்து விட்டனர்.அதனால் இந்த தொற்று வேகமாக பரவ ஆரம்பித்தது.நமது இந்தியாவில் 2 நாட்களில் மட்டும் இரண்டு லட்சத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டது.அதனையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது இதுவே முதன் முறையாகும்.இந்நிலை நீடித்தால் அதிக அளவு இத்தொற்று பரவ வாய்ப்புள்ளது.மீண்டும் பல லட்சகணக்கான உயிர்களை இழக்க நேரிடும்.தற்போது நமது இந்தியாவில் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது.இன்று முதலமைச்சர் சுகாதாரத்துறை ஊழியர்களுடனும்,சுகாதாரத்துறை செயலாளருடனும் ஆலோசனைக்கூட்டம் மேற்கொண்டார்.அந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் நாளை மறுநாள் முதல் தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு போட்டுள்ளனர்.
இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இந்த ஊரடங்கு நீடிக்கும்.அதேபோல ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளனர்.12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது தள்ளி வைத்துள்ளனர்.பெட்ரோல்,டீசல் பங்குகள் எப்போதும் போல இயங்கும் என கூறியுள்ளனர்.குறிப்பிட்ட உணவகங்கள் மட்டும் முழு ஊரடங்கின் போது நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.சுற்றால தளங்களுக்கு தடை விதித்துள்ளனர்.