இனி நீங்கள் வாட்ஸ் ஆப்பிலேயே ஷாப்பிங் செய்யலாம்! வெளியான புதிய அப்டேட்

0
146
Whats App Shoping Update
Whats App Shoping Update

இனி நீங்கள் வாட்ஸ் ஆப்பிலேயே ஷாப்பிங் செய்யலாம்! வெளியான புதிய அப்டேட்

இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை வாரத்தில் அல்லது மாதத்தில் ஒருநாள் ஷாப்பிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.இனி அவர்கள் வாட்ஸ் ஆப்பிலேயே ஷாப்பிங் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது.

ஸ்மார்ட் போன் வந்த பிறகு வாட்ஸ் ஆப் நமது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக அமைந்து விட்டது.தற்போது இந்த வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி படங்கள்,வீடியோக்கள் மற்றும் எழுத்து வடிவிலான தகவல்களை பரிமாறி வருகின்றனர்.சமீபத்தில் வீடியோ காலையும் வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்தது.

இந்நிலையில் புதிய ஷாப்பிங் அம்சங்களை வாட்ஸ் ஆம் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலமாக நிறுவன தயாரிப்புகள், சேவைகளைக் கண்டறிய மக்களுக்கு வாட்ஸ் ஆப் சிறந்த வழிவகை செய்துள்ளது. மக்கள் அதனை வேறு தளங்களுக்கு எடுத்து செல்ல முடியும்.

சேவைகளைச் சேர்ப்பதை மிக விரைவாகவும் எளிதாகவும் இருக்கும். இதனால், வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் மற்றும் தயாரிப்புகள் என்ன கிடைக்கும் என்பதை அவர்கள் அறிவார்கள்.

உணவகம், துணிக்கடை, மளிகை கடை போன்ற வணிகங்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

வாட்ஸ்அப்பில் 8 மில்லியனுக்கும் அதிகமான வணிக தரவுகளை காண  முடியும் என்று வாட்ஸ்அப் தெரிவிந்துள்ளது.

வணிகர்களின் கையிருப்பில் இருக்கும் பொருட்களை அல்லது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் பொருளை எளிதாகக் காண்பிக்கும்.

ஏற்கெனவே இந்த அம்சத்தை உலகம் முழுவதும் உபயோகிக்க தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விதிப்பால் வாக்கு எண்ணிக்கை நடக்குமா? தேர்தல் அதிகாரி விளக்கம்…!
Next articleமிளகில் இவ்வளவு நன்மைகளா? எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் பாருங்க