தமிழகத்திலே நோய் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இருந்தாலும் தமிழகத்தில் இந்த நோய் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட ஒரே நாளில் இரண்டரை லட்சம் நோய்தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறார்கள்.தமிழக அரசு சார்பாகவும் பல்வேறு கட்டுப்பாடுகள் இரவு நேர ஊரடங்கு போக்குவரத்து நிறுத்தம் போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அதேபோல நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் முக கவசம் அணியாமல் தேவை இல்லாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.இது போன்ற சூழ்நிலையில், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து அந்தந்த தொழிலாளர்கள் கவலை தெரிவித்து இருக்கிறார்கள்.
இதற்கிடையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நோய் தொற்று பரவி வருவதால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய தினம் வெளியான தமிழக அரசின் உத்தரவு ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் செய்முறை தேர்வு மற்றும் திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது வெளியாகி இருக்கின்ற தகவல் படி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும் தேதி தொடர்பான தகவல் கிடைத்திருக்கிறது. இதன்படி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் தேர்வு அட்டவணை தேதியை விரைவாக தேர்வுத்துறை வெளியிடும் என்று தெரிவிக்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.