இந்தியாவைப் பொறுத்தவரையில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்தே இந்த வைரஸின் தாக்கம் பரவத் தொடங்கியது. ஆனால் அந்தத் ஊற்றின் வேகம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து தான் அதிகரிக்க தொடங்கியது. அதனை அடுத்து நாடு முழுவதும் முழு ஊர்நகை அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவிட்டது.
அப்போது தொடங்கிய ஊரடங்கு இன்று வரையில் ஆங்காங்கே தளர்வுகளுடன் நீடித்து வருகிறது. இந்த நிலையில், காற்றின் வேகம் குறைய தொடங்கியது. ஊரடங்கிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் சாதாரண நிலைக்கு திரும்பி கொஞ்சம் கொஞ்சமாக தங்களுடைய பணிகளை செய்யத் தொடங்கினார்கள். இந்த நிலையில், தமிழகத்தைப் பொருத்தவரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஊரடங்கு காலத்திலும்கூட இதுதொடர்பாக மாவட்டந்தோறும் நேரில் சென்று ஆய்வு செய்து சுகாதார பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறார்.
அவர் மாவட்டம்தோறும் நேரில் சென்று ஆய்வு செய்ததில் விளைவாக தமிழகத்தைப் பொருத்தவரையில் தொற்றின் பரிசோதனை செய்வது, தடுப்பூசி போடுவது என்று அனைத்து செயல்களும் வேகமாக நடைபெற்றது. ஆனால் எதிர்க்கட்சிகள் வழக்கம்போல இதிலும் அவரை குறை சொல்வதையே பிழைப்பாக வைத்திருந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
ஊரடங்கு அமல் படுத்திவிட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்று தெரிவித்துவிட்டு இவர் மட்டும் மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார், என்ற ரீதியில் எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றம்சாட்ட தொடங்கின. ஆனால் அதனை காதில் போட்டுக் கொள்ளாத முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சூறாவளி சுற்றுப் பயணத்தை தொடர்ந்தார். இதனால் தமிழகத்தில் வெகுவாக தொற்று குறையத் தொடங்கியது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசின் அதிகாரங்கள் அனைத்தும் அதிகாரிகளிடம் சென்றன.இந்த காலகட்டத்தில் தமிழக மக்கள் அனைவரும் நோய்த்தொற்று இருக்கிறது என்பதை மறந்து நோய் தடுப்பு கட்டுப்பாடுகளை மதிக்காமல் இருந்து வந்தன. அதன் நிறைவாக தற்சமயம் இந்த நோய்த்தொற்று அதிகமாகி வருகிறது.
இந்த சூழ்நிலையில், இந்த வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரமானது மிக அதிகமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. கடந்த 4 வாரங்களில் இந்த வைரஸ் தொற்று பாதிப்பு நான்கு மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, நாட்டின் பல மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
டெல்லியைப் பொறுத்தவரையில் ஒரு வாரகாலம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 15 நாள் முழு ஒரு இடங்களில் இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
அதேபோல வார இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.அதேபோல புதுச்சேரி மாநிலத்தில் 47 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 708 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் அதோடு 42 ஆயிரத்து 695 பேர் இந்த நோயிலிருந்து விடுபட்டு இருக்கிறார்கள் என்று ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
இந்த சூழ்நிலையில், இந்த நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். இரவு 8 மணி வரை மட்டுமே உணவகங்களில் அமர்ந்து உண்ணலாம் என்றும் 8 மணிக்கு மேல் பார்சலுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.