தற்சமயம் இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதி இருந்தார்.
இந்த கடிதத்தில் தடுப்பூசி பற்றாக்குறையை தீர்ப்பதற்கு தடுப்பூசி நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி உற்பத்தியை அதிகரிக்க போதுமான நிதி உதவியை வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அதோடு மத்திய அரசு அவசர தேவைக்கான 10 சதவீத தடுப்பூசிகளை மட்டும் வைத்துக் கொண்டு மீதம் இருக்கக்கூடிய 90 சதவீத தடுப்பூசிகளை மாநிலங்களில் கையாளுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
அவருடைய இந்தக் கடிதத்திற்கு பதில் அளிக்கும் விதமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்றைய தினம் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த கடிதத்தில் இந்த கடிதம் உங்களை பூரண உடல் நலத்துடன் வந்து சந்திக்கட்டும் என்று ஆரம்பித்து இருந்தார் ஹர்ஷவர்தன்.
மேலும் அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, நாட்டின் மீது உங்களுடைய பற்றிற்கு நன்றி. ஆனால் உங்களுடைய இந்த அறிவுரையை முதலில் உங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு தெரிவியுங்கள் ஏனென்றால் அவர்கள்தான் தடுப்பூசி மீது அவநம்பிக்கையான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள் என்று மன்மோகன் சிங்கின் அறிவுரை மற்றும் ஆலோசனைகளுக்கு அரசியல் ரீதியாக பதில் தந்திருக்கிறார் ஹர்ஷவர்தன்.
இந்த நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது லேசான காய்ச்சல் மற்றும் லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது.இதனை அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அதோடு சுமார் 88 வயது உடைய மன்மோகன்சிங் இதற்கு முன்னரே இரண்டு முறை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் என்று தெரிகிறது. சர்க்கரை நோயும் அவரது இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தொற்று தடுப்பூசி 2 முறை அவர் செலுத்தி கொண்டிருக்கிறார். மன்மோகன்சிங்கிற்கு நேற்றைய தினம் இந்த கொரோனா பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது. அவருடைய உடல்நலம் சீராக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் கிடைத்திருக்கிறது.