ரீமேக் படங்களை நடிக்க மறுத்தேன்! ஐஸ்வர்யா ராஜேஷின் அதிரடி பேச்சு!

0
118
I refused to act in remake films! Aishwarya Rajesh's action speech!
I refused to act in remake films! Aishwarya Rajesh's action speech!

ரீமேக் படங்களை நடிக்க மறுத்தேன்! ஐஸ்வர்யா ராஜேஷின் அதிரடி பேச்சு!

தமிழக திரையுலகில் பல கதாநாயகிகள் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது முன்னிலையில் வந்துள்ளனர்.அந்த வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷ்-ம் ஒருவர்.இவர் முதலில் மானாட மயிலாட ரியாலிட்டி ஷோ மூலம் அறிமுகமானார்.ஆனால் தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.தற்போது அவருடைய க./பெ ரணசிங்கம் பெருமளவு பாராட்டை பெற்றது.அதற்கடுத்து பெண்கள் சம்மதம் உள்ள படங்களையே நடித்து வருகிறார்.

அந்தவகையில் மலையாளத்தில் வெற்றி பெற்ற தி கிரேட் இந்தியன் கிட்சன் என்ற படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது.கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார்.இயக்குனர் ஆர்.கண்ணன் இப்படத்தை இயக்க உள்ளார்.மேலும் இயக்குனரே மசாலா பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்க உள்ளது.இப்படத்தின் படபிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தை பற்றி கூறியதாவது,நான் பொதுவாக ரீமேக் படங்களுக்கு மறுப்பு தெரிவித்துவிடுவேன்.ஏன்னென்றால் ஒரு படத்தை ரீமேக் செய்வது என்பது அப்படத்தின் ஆத்மாவையே அப்டியே கொண்டு வர வேண்டும்.அது மிகவும் கடினம்.ஆனால் இந்தப்படம் என்னை தேடி வந்தபோது,செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.இன்றைய சமூகத்திற்கு இப்படம் மிகவும் அவசியமானது.க/பெ ரணசிங்கம் படத்தில் நடிக்கும் போது ஓர் பெண்ணை சந்தித்தேன்.அந்த பெண்ணிற்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டார்கள்.இன்றளவும் பெண்ணின் உணர்வுகளுக்கு மதிபளிக்கும் பழக்கம் நம் சமூகத்தில் இல்லை.

கிராமம்,நகரம் என அனைத்து இடங்களிலும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.இயக்குனர் ஆர்.கண்ணன் அவர்களுடன் இது முதல் படம்.மிகச் சிறந்த இயக்குனர் என்று கூறினார்.இதற்கடுத்து இயக்குனர் ஆர்.கண்ணன் கூறியது,நம் கலாச்சாரத்தில் பெண்களுக்கு பெரும்பகுதி சமையல் அறையிலேயே முடிந்துவிடுகிறது.நவநாகரீக உலகில் பெண்களுக்கு  எவ்வித அடிப்படை உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதில்லை.அதையெல்லாம் குறிக்கும் விதமாக தான் தி கிரேட் கிட்சன் என்ற படம் அமைந்துள்ளது என்றார்.இப்படம் காரைக்குடியில் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

Previous articleஇறப்பில் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி! நெட்டிசன்கள் கொந்தளிப்பு!
Next articleஊரடங்கு! பேருந்துகளுக்கு விதிக்கப்பட்ட புதிய தடை!