காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
இந்த கொரோன தொற்றானது ஓராண்டு காலமாக மக்கள் அனைவரையும் பெருமளவு பாடுபடுத்தியது.மக்கள் நலன் கருதி ஏழு மாதங்களுக்கு மேல் ஊரடங்கை அறிவித்தனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் சில தளர்வுகளுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் முதலில் வழிமுறைகளில் கடைபிடித்தனர்.அதன்பின் கொரோனா என்ற ஒன்றை மறந்து அதனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டனர்.தற்போது கொரோனா 2 வது அலை உருவாகி அதிக அளவு மக்களை பாதித்து வருகிறது.
அதிகப்படியான கொரோனா தொற்றானது அரசியல்வாதிகளால் பரவுகிறது என்று சுகாதாரத்துறைத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.தற்போது சட்டமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் படிப்படியாக அரியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. பொதுக்கூட்டங்களில் கலந்துக்கொண்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அதிகப்படியானோர் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்ததால் தற்போது அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது.மக்கள் நீதி மய்யத்தின் துணை வேட்பாளர் பொன்ராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதியானது.அதன்பின் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கொரோனா தொற்றானது உறுதியானது.இது தலைவர்களுக்கு பெரும் அடியாய் இருந்தது.
திமுக செயலாளரான கனிமொழிக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டது.அதனைத்தொடர்ந்து பல இடங்களில் தேத்தல் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.என்னுடம் சமீபகாலத்தில் தொடர்பிலிருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அதன்பின் அவர்கள் அனைவரும் பாதுகாப்புடனும்,வழிமுறைகளை கடைபிடித்தும் இருக்குமாறு கூறியுள்ளார்.