திமுக எம்.பி கூறியது போல தோற்றாலும் தொகுதியை விட்டு தராத அன்புமணி ராமதாஸ்! செய்தது என்ன?

Photo of author

By Parthipan K

திமுக எம்.பி கூறியது போல தோற்றாலும் தொகுதியை விட்டு தராத அன்புமணி ராமதாஸ்! செய்தது என்ன?

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழக அளவில் உள்ள எல்லா தொகுதிகளையும் விட தருமபுரி தொகுதி அனைத்து அரசியல்வாதிகளாலும் மிகவும் கவனிக்கப்பட்டு வந்தது. இதற்கு காரணம் எக்காரணம் கொண்டும் அன்புமணி ராமதாஸ் தருமபுரி தொகுதியில் வெற்றி பெற கூடாது என திமுக தலைமை அதன் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இதற்காக பணத்தையும்,போலி வாக்குறுதிகளையும் வாரி வழங்கிய திமுக ஒரு கட்டத்தில் தொடர்ந்து சாதி ஒழிப்பை பேசி வருவதை கூட மறந்து அக்கட்சியின் வேட்பாளரை தானும் அன்புமணியின் சமூகத்தை சேர்ந்தவர் தான் என சாதி அரசியல் பேச வைத்தது. இவர்கள் திட்டமிட்டப்படியே தேர்தல் முடிவும் அமைந்தது.

தருமபுரியில் வெற்றி பெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமாரிடம் அந்த தொகுதி மக்கள் கொடுத்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்ற போகிறீர்கள் என்றும்,அன்புமணி ராமதாஸ் சார்ந்த கூட்டணி மத்திய அரசாக அமைந்திருப்பதால் உங்களால் தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமா என்று கேள்வியெழுப்பினர்.இதற்கு பதிலளித்த திமுக எம்.பி. அன்புமணி ராமதாஸ் அவர்களும் மாநிலங்களவை உறுப்பினராகி தருமபுரி தொகுதிக்கு நலத்திட்ட உதவிகள் செய்யலாம் என கூறியிருந்தார். அவருடைய இந்த மழுப்பலான பதில் கடும் விமர்சனத்தை உண்டாக்கியது. அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் என்ன செய்ய போகிறார் என்று உறுத்தியளிக்காமல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் திட்டங்களை செயல்படுத்தலாம் என்று கூறியதை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அவர் கூறியது போலவே மாநிலங்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ் தோற்றாலும் தனது தொகுதி மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருவது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2014 – 2019 வரை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த அன்புமணி ராமதாஸ், 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட போது பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட தர்மபுரி மொரப்பூர் ரயில் திட்டத்தை கொண்டு வருவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். 

அந்த தேர்தலில் வெற்றி பெற்ற அவர் அளித்திருந்த அந்த வாக்குறுதியின் படி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பிறகு ரயில்வே அமைச்சர்களாக இருந்த சதானந்தகவுடா, சுரேஷ் பிரபு, பியூஸ் கோயல் என அனைத்து அமைச்சர்களையும் இடைவிடாமல் தொடர்ந்து சந்தித்து கோரிக்கை விடுத்து வந்தார்.

அதற்கு பலனாக கடந்த வருடம் ரயில்வே அமைச்சகம் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி அடங்கிய ரயில்வே மண்டலத்தில் அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு புதிய திட்டம் தருமபுரி, மொரப்பூர் திட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகும் இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டு செயல்பாட்டுக்கு வராமல் இருந்த நிலையில் மீண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளதாக தெரிவித்த அவர், அதற்கான அரசு ஆணையுடன் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தர்மபுரி மக்களை அன்புமணி சந்தித்து இந்த தகவலை தெரிவித்தார்.

அதன்படி, தருமபுரி-மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர், ரூபாய் 350 கோடி மதிப்பில் தொடர்வண்டி திட்டத்தின் அடிக்கல் நாட்டு விழா மார்ச் 4 ஆம் தேதி  தருமபுரி வள்ளுவர் மைதானத்தில் நடந்தது. இந்த திட்டத்தினை அப்போதைய மத்திய தொடர்வண்டி துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.இந்த விழாவில் பாமக இளைஞரணி தலைவரும், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும், தருமபுரி பகுதியை சேர்ந்த தமிழக அமைச்சர் கே.பி அன்பழகன் போன்றோரும் கலந்து கொண்டனர். 

இந்த திட்டத்துக்காக அன்புமணி ராமதாஸ் கடந்த 5 ஆண்டுகளில், மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, சதானந்த கௌடா. பியூஸ் கோயல் ஆகிய மூவரையும் 18 முறை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும் தொகுதி மக்களுக்காக மொரப்பூர்-தருமபுரி இரயில்வே இணைப்புத்திட்ட செயல்பாடுகளை இன்று மொரப்பூரில் இரயில்வே அதிகாரியுடன் இணைந்து ஆய்வு செய்த அன்புமணி ராமதாஸ் எஞ்சிய பணிகளை விரைவில் முடித்து தருமபுரி மாவட்ட மக்களின் பயன்பாட்டிற்கு இத்திட்டம் வர ஆவண செய்யுமாறு, இரயில்வே துறை, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தர்மபுரி தொகுதியில் அன்புமணி தோல்வி அடைந்திருந்தாலும் அவரது அயராத முயற்சியால் தர்மபுரி மக்களின் பல ஆண்டுகள் கனவான மொரப்பூர்-தருமபுரி இரயில்வே இணைப்புத் திட்டத்துக்கு இன்று வரை போராடி வருவது அந்த தொகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திமுகவை சேர்ந்த தற்போதைய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர்.செந்தில் குமார் கூறியது போலவே அன்புமணி ராமதாஸ் அவர்களும் தன்னுடைய தொகுதியை விட்டு கொடுக்காமல் செயல்பட ஆரம்பித்துள்ளது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்