அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு மகிழ்ச்சியில் பேராசிரியர்கள்
தமிழ்நாட்டில் வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது நாள்தோறும் அதிகரித்து வரும் இந்த கருணா பரவையின் காரணமாக பொது மக்கள் எல்லோரும் பீதியில் உறைந்து இருக்கிறார்கள் தமிழக அரசும் பல சோதனைகளையும் அதோடு பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடித்து தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் இந்த பரவல் நிச்சயமாக குறையும் ஆனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் இந்த நோய் தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது தமிழ்நாட்டிலும் ஊரடங்கு மிகக்கடுமையாக படலாம் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இந்த நோய் தோன்றினால் 15 ஆயிரத்து 830 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்து 13 ஆயிரத்து 102 ஆக உயர்ந்திருக்கிறது நேற்று 14 ஆயிரத்து 43 பேர் இந்த நோயில் இருந்து நலம் பெற்று வீடு திரும்பி இருக்கிறார்கள் இதுவரையில் இந்த நோயிலிருந்து விடுதலை பெற்றவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 90 ஆயிரத்து 19 ஆக உயர்ந்திருக்கிறது நேற்று மட்டும் இந்த தொற்றினால் 77 பேர் பலியாகி இருக்கிறார்கள் இதனைத்தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 13 ஆயிரத்து 728 ஆக அதிகரித்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் பேராசிரியர்களை எந்த காரணத்தை முன்னிட்டும் கல்லூரிக்கு நேரில் வரவழைக்க கூடாது என்று கல்லூரி கல்வி இயக்கம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது இணையதள வகுப்புக்காக பேராசிரியர்களை கல்லூரிக்கு வர வேண்டும் என்று தெரிவிப்பதாக புகாரிலிருந்து இருந்தது இந்த நிலையில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது.
கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகிகளுக்கும் கல்லூரி கல்வி இணை இயக்குனர் இந்த சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார். நோய் தொற்று அதிகரித்து வருவதால் இணையதள வகுப்புகள் வீட்டில் இருந்தபடி தான் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது அதேபோல என்.எ.எ.சி சார்ந்த பணிகள் மற்றும் கல்வி சார்ந்த பணிகளுக்கு ஆசிரியர்களை அழைக்கக் கூடாது என்று தமிழக அரசு சார்பாக உத்தரவிடப்பட்டுள்ளது.