அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0
63
Corona infection confirmed for Allu Arjun! Shocked fans!
Corona infection confirmed for Allu Arjun! Shocked fans!

அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.இதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பீதியடைந்துள்ளனர்.கடந்த வருடம் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் விறுவிறுவென பரவ ஆரம்பித்துவிட்டது.பல லட்ச கணக்கான மக்கள் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.மக்களின் நலன் கருது அனைத்து நாட்டின் அரசாங்கமும் ஊரடங்கை அறிவித்தது.

தற்போது கொரோனாவின் 2 வது மற்றும் 3 வது அலை உருவாகியுள்ளது.இதனால் பலருக்குப் கொரோனா தொற்று பரவி வருகிறது.அதுமட்டுமின்றிப் அதிகளவு அரசியல்வாதிகள் மற்றும் திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதற்கு காரணம் அவர்கள் முறையாக விதிமுறைகளை கடைபிடிகாததே ஆகும்.

அந்தவகையில் திமுக ஸ்டாலினின் தங்கை மற்றும் மகளிரணி செயலாளரான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி அனைத்து துறைகளிலும் கலக்கும் பெண்களின் சாக்லெட் பாய் என்று அழைக்கப்படும் மாதவன் வீட்டில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பிரபல பாலிவுட்  நடிகை ஆலியா பட்டுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.அதன்பின் அவர் கொரோனா தொற்று குணமாகி தனது காதலனுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.அதனைத்தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோன தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.அவர்களை தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுனுக்கும் கொரோனா தொற்றானது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர் தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி தன்னுடன் சமீபகாலமாக பழகிய நபர்களையும் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.ரசிகர்கள் கவலைக்கொள்ள வேண்டாம்,நான் தனது வீட்டில் தனிமை படுத்திக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.அனைவரும் பாதுகாப்புடனும் முன்னெச்செரிக்கையாகவும் இருக்கும்படி கேட்டுள்ளார்.