முறையாக நடைபெறுமா வாக்கு எண்ணிக்கை! கலவரம் செய்ய காத்திருக்கும் கட்சிகள்!

0
109

தமிழகத்தில் மொத்தம் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அமைதியான முறையில் நடைபெற்ற இந்த வாக்கு எண்ணிக்கையின் வாக்குகள் அனைத்தும் மே மாதம் இரண்டாம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் முன்னரே அறிவித்து இருந்தது.

இந்தநிலையில், நோய் தொற்று காரணமாக, வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் நோய்த்தொற்று காரணமாக வாக்கு எண்ணிக்கையில் எந்த ஒரு தொய்வும் ஏற்படாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

அதன்படி வரும் இரண்டாம் தேதி திட்டமிட்டவாறு தமிழகம், புதுவை, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை வரும் இரண்டாம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து இருப்பதோடு அதற்கான ஏற்பாடுகளையும் மிகத் தீவிரமாக செய்து வருகின்றது.

இந்த சூழ்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகுவிடம் அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் ஒரு புகாரை தெரிவித்திருக்கிறார். அந்த புகாரில் காட்பாடி சட்டசபைத் தொகுதியில் திமுக சார்பாக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் அவர்களும், அதிமுக சார்பாக ராமுவும் போட்டியிடுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காட்பாடி சட்டசபைத் தொகுதி பொருத்தவரையில் அதிமுகவிற்கு அமோக வரவேற்பு இருக்கிறது. அதே போல வெற்றி வாய்ப்பும் எங்கள் பக்கம் தான் உள்ளது. இது திமுகவிற்கு மிகப்பெரிய நெருடலாக இருந்து வருகிறது. அதேபோல தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவிற்கு அந்த தொகுதியில் இருக்கும் மக்கள் செல்வாக்கு என்ன என்பதை திமுகவினர் அறிந்திருக்கிறார்கள் என அந்த புகாரில் தெரிவித்து இருக்கிறார் பாபு முருகவேல்.

ஆகவே திமுகவினர் வெற்றி பெற இயலாது என்ற விரக்தியில் கடைசி முயற்சியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் கலவரத்தை உண்டாக்கி வாக்கு எண்ணிக்கையை தடை செய்ய வேண்டும் எனவும், வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்த வேண்டும் என்றும், திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.


ஆகவே அந்தப் பகுதியில் கூடுதல் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை நியமிக்க வேண்டும் வேட்பாளர்களின் முகவர்கள் முழுமையான சோதனைக்கு பின்னரே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அந்த புகாரில் பாபு முருகவேல் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் அந்த தொகுதியில் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதுமே அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருப்பதால் இந்த முறையும் திமுக ஆட்சியை கைப்பற்ற முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படலாம் என்று சில கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன.

அதனால் தமிழகம் முழுவதிலும் திமுகவைச் சார்ந்தவர்கள் ஜாதி பிரச்சனை போன்ற கலவரங்களை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.ஆகவே தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே மாதம் 2ஆம் தேதி மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருந்து வருகிறது.

Previous articleநடைபெறுமா வாக்கு எண்ணிக்கை? உயர் நீதிமன்றத்தில் போடப்பட்ட புதிய வழக்கு!
Next articleஇந்த 6  மாவட்டங்களில் கட்டாயம் லாக் டௌன்! வெளிவரும் திடீர் முடிவுகள்!