கொரோனா தாக்குதலில் இந்தியா 1 இடம்! உச்சத்தை தொட்ட பலி எண்ணிக்கை!
கொரோனா தொற்றானது முதன் முதலில் சீனா நாட்டில் வுஹான் என்ற பகுதியில் தோன்றியது.இது படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது.முதலில் அதிக அளவு தாக்கமாக அமெரிக்காவில் காணப்பட்டது.அதற்கடுத்து ரஷ்யா,பிரான்ஸ் என்று படிப்படியாக இந்தியாவிற்கும் வந்தடைந்தது.சென்ற வருடம் மார்ச் மாதத்தில் அதிக அளவு கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் காணப்பட்டதால்,தொடர்ந்து 7 மாதங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.
அதன்பின் முழு ஊரடங்கின் காரணத்தினால் மக்கள் வீட்டினுலே முடங்கி கிடந்தனர்.அப்போது கொரோனா தாக்கத்தின் அச்சத்தால் மக்கள் விதிமுறைகளை கடைபிடித்தனர்.அப்போது கொரோனா தொற்றானது குறைந்து காணப்பட்டது.அதற்கடுத்து மக்களை சில தளர்வுகளுடன் வெளியே செல்ல அனுமதித்தனர்.மக்கள் நாளடைவில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் வாழ ஆரம்பித்துவிட்டனர்.அதனால் மீண்டும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுவிட்டது.
இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி (ரெம்டிசிவர்) கண்டுபிடிக்கப்பட்டு,மக்கள் அனைவரும் போட்டுக்கொள்ளும் படி அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.இந்த கோவிட்ஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்ற எண்ணத்தில் மக்கள் போட முன் வர வில்லை.அதனால் தற்போது கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
கடந்த 24 மணி நேர கணக்கின் படி இந்தியாவில் கொரோனா தொற்றால் 3,645 பேர் உயிரிழந்துள்ளனர்.அதேபோல் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையாக 3,79,257 ஆக உள்ளது.இத்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,69,507 ஆக உள்ளது.தற்போது இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82.33% ஆக உள்ளது.தற்போது இந்தியா கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு பட்டியலில் உலகளவில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.