பிரபல இயக்குனர் திடீர் மறைவு!! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
131
Famous director dies suddenly !! Deep screen in tragedy !! Shocked fans !!
Famous director dies suddenly !! Deep screen in tragedy !! Shocked fans !!

பிரபல இயக்குனர் திடீர் மறைவு!! சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தற்போது வேகமாக பரவி வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு தடுப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் கோரதாண்டவதால் பலர் உயிரழந்துள்ளனர், அந்த வகையில் கொரோனா தொற்று காரணமாக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் கே.வி. ஆனந்த். தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக சாதனை செய்து பின் இயக்குனராக களமிறங்கியவர் கே.வி. ஆனந்த். தமிழில் கனா கண்டேன் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். மேலும்  கே.வி.ஆனந்த் அயன், மாற்றான், காப்பான், அனேகன், கவண் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கி உள்ளார்.

இயக்குனர் கே.வி. ஆனந்த் 1994-ல் மலையாள படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக சினிமாவில் அறிமுகமானார். இவரின் முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளர் என்ற தேசிய விருதை பெற்றார். மேலும் தமிழில் காதல் தேசம், நேருக்கு நேர் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவளராக பணியாற்றி உள்ளார். இயக்குனர் ஷங்கரின் அபிமான ஒளிப்பதிவளராகவும் கே.வி.ஆனந்த் இருந்துள்ளார். ஷங்கரின் முதல்வர், பாய்ஸ் மற்றும் சிவாஜி படங்களுக்கு கே.வி. ஆனந்த் ஒளிப்பதிவளராக இருந்துள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களை பெறும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவிற்கு பலர் தங்களது இரங்கலை தெரவித்து வருகின்றனர்.

Previous articleபன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு! ஆசிரியர்களுக்கு பாடப்பட்ட அதிரடி உத்தரவு!
Next articleராஜஸ்தானை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!