கொரோனா பலி எண்ணிக்கை அதிகரிப்பு! ஆக்ஸிஜன் பற்றாக்குறை சீராகுமா?
கொரோனா தொற்றானது சென்ற ஆண்டை விட தற்போது 2 வது அலையாக உருவாகி மக்களை பாதித்து வருகிறது.சுகாதாரத்துறையின் 24 மணி நேர கணக்கின்படி இந்தியாவில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அதுமட்டுமின்றி 3,500 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் குறிப்பாக டெல்லி,பீகார்,மகாராஷ்டிரா ஆகிய பகுதிகள் இடுகாடுகளாக காட்சியளிக்கிறது.கொரானா நோயாளிகள் அதிகரிப்பின் காரணமாக முக்கிய நகரங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அதனால் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது.கொரானா தொற்று பாதித்தவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படும்,மூச்சு திணறலை கட்டுப்படுத்த அவர்களுக்கு ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுகிறது.முதலில் மூச்சுதிணறல் காரணமாக கொரோனா தொற்று நோயாளிகளுக்கு 7500 டன் ஆக்ஸிஜன் தேவை இருந்தது.ஆனால் தற்போதைய நிலவரப்படி இதே போல எட்டு மடங்கு ஆக்ஸிஜன் தேவை உள்ளது.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை கட்டுப்படுத்த லிண்டே பிஎல்சி நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை நிறுவியுள்ளது.அந்தவகையில் பிஎல்சி நிறுவனம் கூறியதாவது,கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது.அதனால் ஆக்ஸிஜன் உற்பத்தியை 25% அதிகரிக்க உள்ளோம்.இதனால் அடுத்த மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து ஆக்ஸிஜன் பற்றாக்குறை சீராகும்.25 சதவீதம் ஆக்ஸிஜன் உற்பத்தியாய அதிகரிப்பதால்,பலி எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.அதுமட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் ஆக்ஸிஜன் சீராக கிடைக்க மத்திய அரசு பல திட்டங்களை திட்டமிட்டு வருகிறது.