எப்போதும் நான் உங்களில் ஒருவன் தான்! ஜெயக்குமார் போட்ட ட்வீட்!

0
123

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது அந்த கூட்டணி தமிழகத்தில் இருக்கின்ற 234 தொகுதிகளில் 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அதோடு திமுக தனித்து 126 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.இதனை தொடர்ந்து அந்த கட்சியின் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை 6 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த கூட்டத்தில் முறைப்படி ஸ்டாலின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதனைத் தொடர்ந்து வரும் 7ஆம் தேதி அவர் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவையில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் உள்பட 16 அமைச்சர்கள் வெற்றி அடைந்திருக்கிறார்கள். அமைச்சர் ஜெயக்குமார் சிவி சண்முகம் உள்பட பல அமைச்சர்கள் தோல்வியை சந்தித்து இருக்கிறார்கள்.

தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட 30 அமைச்சர்கள் இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அமைச்சர்கள் நிலோபர் கபில், வளர்மதி, பாஸ்கரன், உள்ளிட்டோர் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அந்த மூவரையும் தவிர்த்து 27 அமைச்சர்கள் போட்டியிட்டார்கள்.

அதில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயக்குமார் திமுக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக சென்னை இராயபுரம் சட்டசபை தொகுதியில் ஜெயக்குமார் போட்டியிட்டார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். அவர் வெற்றி பெற்ற பின்னர் மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன் காரணமாக, ராயபுரத்தில் ஜெயக்குமார் மிக எளிதாக வெற்றி அடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தான் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் மூர்த்தியிடம் 27577 வாக்கு வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறார். ஐட்ரீம் மூர்த்தி 63 ஆயிரத்து 816 வாக்குகள் பெற்றவர்கள் ராயபுரத்தில் செல்லப்பிள்ளை என்று தெரிவிக்கப்பட்டு வந்த ஜெயக்குமார் 36 ஆயிரத்து 224 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார்.

இந்த நிலையில் ஜெயக்குமார் தன்னுடைய வலைதள பக்கத்தில் வாக்காளர்களுக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை போட்டிருந்தார். அந்த பதிவில் வெற்றியோ, தோல்வியோ, எதுவாக இருந்தாலும் நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன் உங்களுடனேயே பயணிப்பேன் என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல வாக்களித்த, வாக்களிக்காத ராயபுரம் மக்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி நான் எப்போதும் போலவே என் மக்கள் பணியை தொடர்வேன், நான் இப்போதும் உங்களில் ஒருவன் தான் உங்களுக்கான ஒருவன்தான் என்று பதிவிட்டு இருக்கிறார்.

Previous articleஅக்னியின் ஆட்டம் ஆரம்பமாகிறது!! கொளுத்தும் கோடை வெயில்!! தர்பூசணியைத் தேடி அலையும் மக்கள்!! மகிழ்ச்சியில் விவசாயிகள்!!
Next articleபத்திரிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மு.க.ஸ்டாலின் அறிவித்தது என்ன?? மகிழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள்!!