ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! முதல்வராக பதவி ஏற்கும் முன்னரே கிளம்பியது சர்ச்சை!

0
112

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது. இந்த நிலையில் பத்து வருடங்களுக்கு பின்னர் மறுபடியும் திமுக ஆட்சியில் அமர இருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் வருகின்ற ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், அவர் முதலமைச்சராக பதவி கேட்பதற்கு முன்னரே பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் ஸ்டாலின். தமிழ்நாட்டில் கூடுதல் கட்டுப்பாடுதான் ஊரடங்கு போடப்பட்டு இருக்கின்ற நிலையில், பத்திரிகையாளர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.

அதாவது பத்திரிகையாளர்கள் எல்லோரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவார் என்று ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மழை, வெயில் மற்றும் தொற்று காலங்களிலும் தங்களுடைய உயிரை பணயம் வைத்து செய்தித்தாள்கள், காட்சி மற்றும் ஒளி ஊடகங்களில் பணிபுரிந்து வருகின்ற எல்லோருமே தமிழகத்தில் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு முன் களப் பணியாளர்களுக்கு உரிய உரிமைகள் மற்றும் சலுகைகளைத் அவர்களுக்கும் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால் ஒரு சிலர் ஸ்டாலின் இவ்வாறு ஊடகத் துறையினருக்கு முன்னுரிமை அளிப்பது நோய்த்தொற்று காரணத்தினால் மட்டும் கிடையாது. அவர் எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் ஆளும் கட்சியை விட்டு விட்டு அவருக்கு உதவி புரிந்ததற்காகவே அவர் இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் என்றும் தெரிவிக்கிறார்கள்.

ஏனென்றால் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் கூட அதிமுக என்ன செய்கிறது என்று ஊடகத்துறையினர் கவனித்ததைவிட எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் என்ன செய்கிறார் என்பதை தான் அதிக கவனித்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதோடு ஸ்டாலின் என்ன செய்தாலும் அதை தமிழகம் முழுவதிலும் கொண்டு சேர்த்ததில் தமிழக ஊடகத் துறையினருக்கு ஒரு மிகப்பெரிய பங்கு இருந்ததாகக் கருதப்படுகிறது. அதேவேளையில் ஆளுங்கட்சியான அதிமுக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அதனை ஊடகத் துறையினர் பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

தான் எதிர்க்கட்சியாக இருந்த சமயத்தில் தனக்கு பெரும் உதவிகரமாக இருந்த ஊடகத் துறையினரை கவுரவிக்கும் விதமாகவே இப்போது முதல்வராக பொறுப்பேற்க இருக்கின்ற ஸ்டாலின் இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

Previous articleநாளை முதல்  19 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு!! மாநிலஅரசு அவசர அறிவிப்பு!! மாநிலம் முழுவதும் தீவிரமாக பரவும் கொரோனா!!
Next articleபத்திரிக்கை ஊடகங்களை லெப்ட் ரைட் வாங்கிய மத்திய அரசு! ஆதாரங்களை சமர்ப்பித்த சுகாதாரத்துறை!