டாஸ்மாக் இயங்க தடையா? வெளிவரும் தமிழக அரசின் திடீர் முடிவு!
கொரோனா தொற்றின் 2-வது அலையானது தற்போது இந்தியாவில் பெருமளவு தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.அந்தவகையில் இந்தியாவில் டெல்லி,கர்நாடக,குஜராத்,மகாராஷ்டிரா,தமிழ்நாடு,ஆந்திரா என குறிப்பிட்ட மாநிலங்களில் தொற்று அதிக அளவு காணப்படுகிறது.அதனால் சில மாநிலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் தொற்று அதிகமுள்ள டெல்லியில்,தற்போது முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து மகாராஷ்டிராவிலும் அதிக தொற்று காரணமாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து ஆந்திராவில் பகுதி நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளனர்.மற்ற மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் அதிக அளவு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.நாளை முதல் புதிய நடவடிக்கை தமிழ்நாட்டில் அமலுக்கு வருகிறது.கடைகள் அனைத்தும் பகுதி நேரம் மட்டுமே செயல்படுத்த அனுமதி அளித்துள்ளனர்.
உணவகங்களில் உட்கார்ந்து சாப்பிட தடை விதித்துள்ளனர்.அதற்கு பதிலாக பார்சல் வசதியை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளனர்.இவ்வாறு பல நடடிக்கைகள் எடுப்பினும் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.அதனையடுத்து ஆக்சிஜன்,கொரோனா தடுப்பூசி என பல தட்டுப்பாடுகள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது.சென்னையில் கொரோனா தொற்று நோயாளிகள் 11 பேர் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.மறுபக்கம் பல வெளிநாடுகளிலிருந்தும் ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யப்படுகிறது.
ரஷ்யா-விலிருந்து நேற்று ஆக்ஸிஜன் இறக்குமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது டாஸ்மாக் மதிய 12 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் இயங்கி வருகிறது.இந்நிலையில் அனைத்து கடைகளும் நாளை நண்பகல் 12 பனி வரை மட்டுமே இயங்கும் என கூறியுள்ளனர்.ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கு எவ்வித தடையையும் விதிக்கவில்லை.அதனால் டாஸ்மாக் செயல்படும் நேரத்தை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.