அமலுக்கு வந்தது புதிய ஊரடங்கு கட்டுப்பாடு!

0
117

தமிழகத்தில் நாட்கள் செல்ல செல்ல முயற்சித்த அதிகரித்துக் கொண்டே வருவதால் அதனை கருத்தில் வைத்து நோய்த்தொற்று ஏற்படுவதை தடுப்பதற்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கின்ற ஒரு சில செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளை கருத்தில் வைத்து தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்த தவிர்க்க இயலாத காரணங்களின் அடிப்படையில் இன்று முதல் காலை 4 மணி முதல் வரும் 20ஆம் தேதி காலை 4 மணி வரையில் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

அதாவது அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு அதிகபட்சமாக 50 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல பயணியர் தொடர்வண்டி மற்றும் மெட்ரோ தொடர்வண்டி தனியார் பேருந்துகள் அரசு பேருந்துகள் மற்றும் வாடகை கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் 50 சதவீத இறக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

ஏற்கனவே 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட பெரிய வணிக வளாகங்கள் இயங்குவதற்கு சென்ற 26 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தற்சமயம் வணிக வளாகங்களில் இயங்கி வரும் பலசரக்குக் கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இவற்றைத் தவிர தனியாக செயல்பட்டு வரும் மளிகை மற்றும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி விற்பனை செய்யும் கடைகள் குளிர்சாதன வசதி இல்லாமல் நண்பர்கள் 12 மணி வரையில் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அதேபோல இந்த கடைகள் அனைத்தும் ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே வந்து வாணிபம் செய்வதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. ஆகவே இதுபோன்ற மளிகை மற்றும் பலசரக்கு சாமான் கடைகள் மற்றும் காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் எல்லாம் திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. மருந்தகங்கள் மற்றும் பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம்போல எந்தவிதமான தடையும் இல்லாமல் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து உணவகங்களிலும் பார்சல் வழங்குவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. தேனீர் கடைகள் பகல் 12 மணி வரையில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் அமர்ந்து உண்பதற்கான அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. விடுதிகளில் தங்கி இருக்கின்ற வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கி இருக்கின்ற அறைகளிலேயே உணவுகள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உணவுக் கூடங்களில் அமர்ந்து உணவு உண்பதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்று பரவல் காரணமாக ஏற்கனவே இறுதிச் சடங்கு சார்ந்த நிகழ்வுகளில் 25 நபர்களுக்கு அதிகமானோர் பங்கேற்கக் கூடாது என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


ஏற்கனவே மாநகராட்சி மற்றும் நகராட்சி போன்ற பகுதிகளில் அழகு நிலையங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தற்சமயம் ஊரகப் பகுதிகளில் இருக்கின்ற அனைத்து கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Previous articleஎச்சரிக்கை விடுத்த யோகிபாபு!அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Next articleநடமாடும் மருத்துவமனை ஆகும் பேருந்துகள்!