அரசு ஊழியர்களுக்கு இன்ப செய்தி! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Photo of author

By Rupa

அரசு ஊழியர்களுக்கு இன்ப செய்தி! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

அரசு மின் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஓய்வு பெறும் வயதை உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.அந்தவகையில் ஆணையில் கூறியிருப்பது,அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 58 யிலிருந்து 59 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.அதனையடுத்து அரசு மின் வாரியத்தில் பணி புரிபவர்களுக்கு வயது 58 யிலிருந்து வயது 59 ஆக ஆக உயர்ந்தது.அதனையடுத்து தற்போது மின் வாரியத்தில் பணி புரிபவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஓய்வு பெறும் வயது 50 யிலிருந்து 60 ஆக உயர்த்தி ஆணை பிறபிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையானது அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்,சட்ட மற்றும் அரசியலமைப்பு அமைப்புகள்,பொதுத்துறை நிருவனங்கள்,உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும் என கூறியுள்ளனர்.இந்த உத்தரவை முழுமையா மின்சாரவாரியம் பரிசீலித்த பின்னரே தமிழக அரசின் ஆணையை ஏற்க முடிவு செய்தது.அதனையடுத்து மின்சார வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வு வயது 59 யிலிருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது பணியில் இருக்கும் அனைவருக்கும் இந்த ஓய்வு கால அவகாசம் வழங்கப்படும்.அதுமட்டுமின்றி 31.5.2021 முதல் ஓய்வு பெறுவோருக்கும் இந்த ஆணை பொருந்தும் என தமிழக அரசு திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதனால் மின்சார வாரியம் பணி புரிபவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள்.அவர்களோடு இதர அரசு ஊழியர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.