நாட்டில் நோய்த்தொற்று பரவாயில்லை இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்பும் நாள் தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு நாளைக்கு 20 ஆயிரத்துக்கும் மேல் இந்த நோய் தொற்று பாதிப்பு ஏற்படுவதாலும் உயிரிழப்பு நூற்றுக்கும் மேல் ஏற்படுவதாலும் மக்கள் இதனால் மிகப்பெரிய பயத்தில் இருந்து வருகிறார்கள்.
இதனைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகள் இரவு நேர ஊரடங்கு போன்றவற்றை விதித்தும் நோய்த் தொற்றின் தாக்கம் குறைவது போல் தெரியவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என்று எல்லோரும் அடுத்தடுத்து இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணனுக்கு இந்த நோய்த் தொற்று பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்.