தமிழ்நாட்டில் இருக்கின்ற எல்லா மாவட்டங்களிலும் நோய்த்தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கட்டுப்பாடுகள் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட இருக்கிறது. நாளை முதல் அனைத்து விதமான கடைகளும் பகல் 12 மணி வரை மட்டுமே செயற்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
நாட்கள் செல்லச் செல்ல இந்த நோய் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சிகிச்சைக்குத் தேவையான உபகரணங்கள் இல்லை என வெளியாகும் செய்தி வேதனை அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. இந்த நோய்த்தொற்று இதற்கு போதிய சிகிச்சை இல்லாமல் தினந்தோறும் பல உயிர்கள் போய்க் கொண்டிருக்கின்றன.
ஆகவே இதனை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆங்காங்கே முகாம்கள் அமைத்து 18 வயதிலிருந்து எல்லோருக்குமே தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டும் என்று மாநில, மத்திய அரசுகளுக்கு கோரிக்கை வைத்திருப்பதோடு எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.