தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடைய தலைமையிலான அமைச்சரவையில் அவருடன் இணைந்து 34 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் அதிமுகவின் சார்பாக அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பூ பன்னீர்செல்வம் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். அதேபோல கூட்டணி கட்சி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பா சிதம்பரம், வேல்முருகன், உள்ளிட்ட பலரும் பங்கேற்பார்கள் அதோடு ஸ்டாலின் குடும்பத்தினர் எல்லோரும் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பார்கள்.
இதனைத் தொடர்ந்து முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான் என்று தெரிவித்து தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஸ்டாலின். தமிழகத்தின் 23 முதல்வராக பதவியேற்றார் ஸ்டாலின். முதல்முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் முதல்வராக பொறுப்பேற்றிறுக்கிற ஸ்டாலின் அவர்களுக்கு பா.ம.க இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். தமிழக மக்கள் விரும்பும் ஆட்சியை அவர் வழங்க வேண்டும் அதற்கான ஆலோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சியை எப்போதும் வழங்குவதற்கு தயாராக இருக்கிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதோடு ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய உளமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.