பாஜக எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழப்பு! அதிர்ச்சியில் கட்சி நிர்வாகம்!
கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு முதல் தொடங்கியதுஅதனையடுத்து சிறதளவு குறையவே இந்த ஆண்டு மீண்டும் கொரோனாவின் 2வது அலை தீவிரமாகி வருகிறது.அந்தவகையில் மக்கள் அனைவரும் பெருமளவு பாதித்து வருகின்றனர்.பல அரசியல்வாதிகள்,விளையாட்டு வீரர்கள் மற்றும் திரையுலகினர் என அனைவரும் அதிக அளவு பாதித்து வருகின்றனர்.அதனால் மக்கள் விழிப்புணர்வுடன் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து நடக்குமாறு தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
அதேபோல மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் படியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.அந்தவகையில் ஆக்சிஜன் பற்றக்குறையாலும் பலர் உயிரிழந்து வருகின்றனர்.நிலைமை கை மீறி போகும்போது அரசாங்கம் ஊரடங்கை அமல்படுத்திவிடுகிறது.பல அரசியல் தலைவர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதினாலும் கொரோனா தொற்றுக்கு பாதிப்பாகி விடுகின்றனர்.அந்தவகையில் பல அரசியல் தலைவர்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வர முடியாமல் மரண படுக்கைக்கு சென்று விடுகின்றனர்.
தற்போது உத்திரபிரேதசத்தில் பாஜக கட்சியின் எம்எல்ஏ பகதூர் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.தற்போது பாஜக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக கொரோனா தொற்றால் பாதிப்படைந்து உயிரிழந்து வருகின்றனர்.இவ்வாறு ஒவ்வொரு எம்எல்ஏக்களும் மரணமடைந்து வருவதால் இதர தலைவர்கள் தங்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.மக்களிடமும் பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.இவர் மரணமடைந்ததை அடுத்து பாஜக தலைமை பெரும் சோகத்தில் உள்ளது.அடுத்த நடவடிக்கை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.டெல்லியில் மட்டும் கொரோன உயிரிழப்போர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.