தமிழகத்துக்கு உதவிய நிறுவனம்!! பாராட்டுகளை தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
தமிழகத்தில் தொடர்ந்து வரும் கொரோனா பரவல காரணமாக அரசு பல கட்டுபாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் வழக்கத்தை விட இந்த கொரோனா காலகட்டங்களின் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதித்து வருகின்றது. மேலும் கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் பலர் ஆக்சிஜன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவம் பார்ப்போர் நெஞ்சை பதைப்பதைக்க வைக்கிறது.
இந்த அவல நிலையைக் கண்டு இந்தியவுக்கு உதவ பல நாடுகள் முன் வந்துள்ளது. ஆனாலும் அமெரிக்கா போன்ற பொருளதாரத்தில் வளர்ச்சி அடைந்த நாடுகள் இந்தியாவுக்கு உதவ மறுப்புத் தெரிவித்து தான் வருகின்றது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவும் பெரும் பொருளாதார வீழ்ச்சியை கண்டு வருக்கின்றது.
மேலும் தமிழத்தில் நாளுக்கு நாள் கோரத்தாண்டவம் எடுக்கும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் அலைபாய்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்கு முழு ஊடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக்கத்தின் புதிய முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா நிவாரண நிதியாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை இன்று ஆரபித்து வைத்தார். இதைத் தொடர்ந்து டி.வி.எஸ். நிறுவனம் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூபாய் 25 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் வழங்கி உள்ளது.